அடுத்த 3 மணி நேரத்தில்.. இந்த 10 மாவட்டங்களில் மழை நின்று பெய்யும்! வீக் எண்ட் பிளானை தள்ளி போடுங்க
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்தாண்டு கோடைக் காலத்தின் பாதிப்பே தெரியாத அளவுக்குக் கூட சில இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. இன்றும் கூட பரவலாக மழை பெய்தே வருகிறது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இந்தாண்டு மே மாதம் வழக்கத்திற்கு மாறாக மழை பெய்தது. குறிப்பாகச் சென்னையில் கூட நல்ல மழை பெய்தது. இதனால் கோடை வெப்பத்தின் பாதிப்பு தெரியாமலேயே பல இடங்களில் இருந்தது. மேலும், பருவமழையும் முன்கூட்டியே தொடங்கிவிடவே மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

அடுத்த 3 மணி நேரம்
குறிப்பாகக் கடந்த சில நாட்களாகக் கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வந்தது. இன்றும் கூட மாநிலத்தில் பரவலான இடங்களில் மழை பெய்தே வருகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
10 மாவட்டங்களில் மழை
அதாவது இரவு 7 மணி வரை தென்காசி, தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலும் ஓிரு இடங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் சாலைகளில் நீர் தேங்கவும் டிராபிக் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மெல்லக் குறையும் மழை
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 06-06-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (31-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (01-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications