சென்னைக்கு அடுத்த 12 மணி நேரம் ரொம்ப கிரிடிக்கல்! 3 மாவட்டங்களுக்கு சம்பவம்.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: மிக்ஜாம் புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் அடுத்த 12 மணி நேரத்திற்கு அதாவது நாளை காலை 8 மணி வரை சென்னை உட்பட 3 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் பெய்த தென்மேற்கு பருவமழை போதுமான அளவுக்கு மழை பொழிவை கொடுத்தது. இதனை தொடர்ந்து தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது வரை இயல்பை விட 6 சதவிகிதம் குறைவாகவே பெய்திருக்கிறது. இந்நிலையில் இதனை ஈடு செய்யும் விதமாக தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகியிருக்கிறது. கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக தொடங்கியது. இன்று மிக்ஜாம் புயலாக உருவெடுத்திருக்கிறது.

இந்த புயல் டிச.5ம் தேதி சென்னைக்கு அருகே, தெற்கு ஆந்திராவின் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே தீவர புயலாக கரையை கடக்கும் என வானிலை ஆய்வு யைம் எச்சரித்திருக்கிறது. இதன் காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும்(ரெட் அலர்ட்), ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும், நாளை மணிக்கு, 80 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசும் என்றும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில் தற்போது புதிய அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது. அதாவது இன்று இரவு 8 மணியில் இருந்து நாளை காலை 8.30 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டையிலும் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications