150 டீம்.. 13,000 பேர்.. 4 ஷிப்ட்.. சென்னைக்கு கனமழை எச்சரிக்கை.. ரெடியான பிரம்மாண்ட வார் ரூம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சென்னை ரிப்பன் மாளிகையில் வார் ரூம் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதற்காக ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் 150 பேர் கொண்ட குழு, 4 ஷிப்ட்களாக செயல்படுகிறது. பொதுமக்களின் உயிரும், உடமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முதன்மை நோக்கம் என்பதால் இந்த பணிகள் தீவிரமாக நடத்தப்படுவதாக அமைச்சர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

weather tamilnadu weatherman

இதற்காக 13,000 தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்பு குறித்து 1913 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 113 மோட்டார் பம்புகள் தாழ்வான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

83 கழிவுநீர் உறிஞ்சும் லாரிகள் உள்ளன. பணிகளை மேற்பார்வையிட பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதோடு TamilNadu Alert என்ற செயலி மூலம் முன்னெச்சரிக்கைகளை உடனுக்குடன் பொதுமக்கள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

உதயநிதி ஆலோசனை: சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் புகாரளித்தவரை அழைத்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி.. உங்கள் புகார் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கலயா? சரிங்க.. நான் உடனே ஆள் அனுப்பி நடவடிக்கை எடுக்க சொல்றேங்க. என்று கூறினார்.

மழைக்கால புகார்களை தெரிவிக்க 1913 உதவி எண்.. மழை பாதிப்புகளை அறிய TN Alert செயலியை பயன்படுத்தும்படி கூறினார். இதற்காக 13,000 தன்னார்வலர்கள் தயார் செய்யப்பட்டு உள்ளதாக சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்தார். மழைக் காலத்தில் ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் - வானிலை குறித்த தகவல்களை மக்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துவது - வெள்ளத் தடுப்புக்கானத் திட்டங்கள் - பணிகளை விரைந்து முடிப்பது - மழைக் காலத்தில் ஏற்படும் தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பல்வேறு ஆலோசனைகள் - அறிவுரைகளை வழங்கினார்கள். விழிப்புணர்வுடன் செயல்பட்டு மழைக்காலத்தில் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

சென்னைக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் அரக்கோணம் முகாமில் 300 வீரர்கள் நவீன உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

அதிகாரிகள் நியமனம்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க சென்னைக்கு 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இவர்கள் சென்னையில் நடைபெறும் பணிகளை கண்காணிப்பார்கள். சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே துணை ஆணையர்களாக பணியாற்றிய சமீரன், குமாரவேல்பாண்டியன், மேக்நாத்ரெட்டி, உள்ளிட்டோர் நியமனம். பணிகளை மண்டல வாரியாக ஒருங்கிணைத்து துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பருவ மழை காலங்களில் மழை நீர் தேங்கக் கூடிய தாழ்வான பகுதிகளில் மழை நீரை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் டீசல் மோட்டார்களை தயார் நிலையில் வைக்கும் பணியில் பெருநகர சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+