Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை + புறநகர்.. கூடவே 10+ மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை கொட்ட போகுது.. புது அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கலாம் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பருவமழை சீசன் தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாநிலம் முழுக்க மழை கொட்டும் நிலையில், பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

chennai meteorological dept rain

கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலையே நிலவுகிறது. வரும் காலத்திலும் மழை தொடரும் என்றே வானிலை மையமும் கூறியுள்ளது.

16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்தில் மொத்தம் தமிழ்நாட்டில் மொத்தம் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கலாம். மேலும், சாலைகளில் நீர் தேங்கலாம் என்பதால் டிராபிக் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் நாட்களில் வானிலை: நாளைய தினம் தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் நவ. 9ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான- கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+