டாப் 20 பட்டியலில் 19 இந்திய நகரங்கள்.. உலகிலேயே இன்று அதிக வெயில் எங்கே தெரியுமா? ஷாக் லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கோடைக்காலம் தொடங்கி விட்டது. மதிய வேளையில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தான் உலகிலேயே இன்று அதிக வெயில் பதிவான நகரங்களின் டாப் 20 பட்டியலில் 19 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை வெயில் கொளுத்தி எடுக்கும். இதற்கு இந்த ஆண்டும் விதிவிலக்கல்ல. ஏப்ரல் மாதத்திலேயே வெயில் மக்களை பாடாய் படுத்துகிறது. காலை 10 மணிக்கெல்லாம் வெயில் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

hottest cities

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இதே நிலை தான் நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. வீட்டில் ஏசி, மின்விசிறி இன்றி இருக்க முடியவில்லை. இதனால் அடுத்து வரும் மே மாதத்தை நினைத்து மக்கள் அஞ்சி நடுங்குகின்றனர்.

டாப் 20யில் 19 இந்திய நகரங்கள்

இதற்கிடையே தான் தற்போது அதிர்ச்சி டேட்டா ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது உலகிலேயே இன்று அதிகமாக வெயில் பதிவான நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் நகரம் தான் முதல் இடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி டாப் 20ல் 19 இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.

குறிப்பாக பீகார், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் உத்தர பிரதேசத்தில் வெப்பநிலை உச்சத்தை எட்டி உள்ளது. பல இடங்களில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸை தாண்டி உள்ளது. இதனால் உலகில் அதிகமான வெயில் அடித்த நகரங்களின் டாப் 20 லிஸ்ட்டில் 19 நகரங்கள் நம் நாட்டை சேர்ந்தவையாக உள்ளன. அதன்படி உலகில் அதிக வெயில் பதிவான நகரங்களின் பட்டியல் விவரம் பின்வருமாறு:

டாப் 10 நகரங்களின் லிஸ்ட்

நகரம் - மாநிலம் - பதிவான வெப்பநிலை

1. பாகல்பூர் - பீகார் - 44 டிகிரி செல்சியஸ்
2.தால்சர் - ஒடிசா - 44 டிகிரி செல்சியஸ்
3.அசன்சோல் - மேற்கு வங்கம் - 44 டிகிரி செல்சியஸ்
4.பேகுசாராய் - பீகார் - 43 டிகிரி செல்சியஸ்
5.மோதிஹரி - பீகார் - 43 டிகிரி செல்சியஸ்
6.முங்கர் - பீகார் - 43 டிகிரி செல்சியஸ்
7.போஜ்பூர் - பீகார் - 43 டிகிரி செல்சியஸ்
8. சிவான் - பீகார் - 43 டிகிரி செல்சியஸ்
9. பெட்டியா - பீகார் - 43 டிகிரி செல்சியஸ்
10. பாலங்கீர் - ஒடிசா - 43 டிகிரி செல்சியஸ்

டாப் 11 டூ 20 நகரங்களின் விவரம்

11.துர்காபூர் - மேற்கு வங்கம் - 43 டிகிரி செல்சியஸ்
12.பச்சிம் மெதினிபூர் - மேற்கு வங்கம் - 43 டிகிரி செல்சியஸ்
13.லும்பினி சன்ஸ்கிர்ல்டிக் - நேபாளம் - 43 டிகிரி செல்சியஸ்
14. பிர்பூம் - மேற்கு வங்கம் - 43 டிகிரி செல்சியஸ்
15. கோரக்பூர் - உத்தர பிரதேசம் - 43 டிகிரி செல்சியஸ்
16. குல்டி - மேற்குவங்கம் - 43 டிகிரி செல்சியஸ்
17.பங்குரா - மேற்குவங்கம் - 43 டிகிரி செல்சியஸ்
18.வாரணாசி - உத்தர பிரதேசம் - 43 டிகிரி செல்சியஸ்
19.ராணிகஞ்ச் - மேற்கு வங்கம்- 43 டிகிரி செல்சியஸ்
20. தாலுர்பண்ட் - மேற்குவங்கம் - 43 டிகிரி செல்சியஸ்

நாளை முதல் வெயில் அதிகரிக்கும்

மேலும் ஏப்ரல் 22ம் தேதி (நாளை) முதல் ஏப்ரல் 24ம் தேதி வரை இந்தியாவின் பல மாநிலங்களில் வெப்ப அலைகள் வீசும் என்று வார்னிங் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை கடக்கும்போது வெப்பஅலை என்று அழைக்கப்படும். இதனால் வரும் நாட்களில் வெப்பஅலையின் தாக்கம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மதிய வேளைகளில் வெளியில் அலைவதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக வயதானவர்கள், குழந்தைகள், உடல்நல பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் இருப்பது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+