"ஆரஞ்ச் அலெர்ட்".. இங்கெல்லாம் கனமழை அடித்து வெளுக்க போகுது.. தமிழ்நாட்டிற்கு வானிலை மையம் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் நீலகிரி, மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகள், கோவையில் இன்று கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயில் முற்றிலுமாக முடிவிற்கு வந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக மழை காலம் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. கடந்த மாதங்களில் வாட்டி வதைத்துக்கொண்டு இருந்த கடுமையான வெயில் ஒரு வழியாக முடிவிற்கு வந்துள்ளது. வெயிலின் தாக்கம் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக மழை பெய்ய தொடங்கி உள்ளது.

2 districts get orange alert in Tamil Nadu for heavy rain by Indian Weather Department

கேரளாவில் மழை காலம் காரணமாக மழை பிச்சு எடுத்துக்கொண்டு இருக்கும் நிலையில் தமிழ்நாட்டிலும் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. அந்த வகையில் இன்று தமிழ்நாட்டின் வானிலை எப்படி இருக்கும், மழைக்காலம் எப்படி இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் நீலகிரி, மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகள், கோவையில் இன்று கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிற்பகல் வரை இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நீலகிரி மற்றும் கோவைக்கு இன்று ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது போக தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய போவதாக என்று குறிப்பிட்டு உள்ளனர். இன்று மட்டுமல்ல அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.

அதன்படி ஜூலை 10ம் தேதி வரை மழை வெளுக்க போகிறது. அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. அதேபோல் திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். மேலும் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

இந்திய கடலின் மேற்கு பகுதியில் திடீரென உயர் மட்டத்தில் மேடன்-ஜூலியன் அலைவு ஏற்படுகிறது. இதுதான் இந்த மழைக்காலத்தில் அதீத மழைக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த மாற்றம் காரணமாக அடுத்த 2 வாரங்களுக்கு நாடு முழுக்க பரவலாக மழை பெய்யும். மழைக்காலம் லேட்டாக தொடங்கியதால் ஏற்பட்ட மழை இழப்பை சரி செய்யும் விதமாக நாடு முழுக்க மழை பெய்யும்.

வங்கக்கடலில் நிலவும் மாற்றங்களும் கூட இந்த சூழ்நிலைக்கு தகுந்தபடியே இருக்கும். கடந்த காலங்களில் பெரும்பாலும் வட தமிழ்நாட்டின் அட்சரேகைக்கு மேலே பருவமழை காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் போது அது இடியுடன் கூடிய மழையாக பெய்யும், இது பருவமழையை பொறுத்து ஓரிரு நாட்கள் நீடிக்கும். சென்னையை பொறுத்தவரை மழை பெய்யாது. ஆனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

லேசான வெயில் நீடிக்கும். அதிர்ஷ்டவசமாக ஓரிரு இடங்களில் சென்னையில் இன்று மழை பெய்யலாம். மற்றபடி தமிழ்நாட்டில் நீலகிரி, மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகள், கோவையில் இன்று கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+