வேலூரில் மழையா? டைம் குறித்த வானிலை ஆய்வு மையம்! 21 மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட கூல் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் வேலூர் உட்பட 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்னிந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையானது மே மாதம் இறுதியிலும், ஜூன் மாதம் 1ம் தேதியும் தொடங்கும். ஆனால் இந்த முறை எதிர்பார்த்ததைவிட ஒரு வாரம் தாமதமாகவே தொடங்கியது. இந்த மழையால் முதலில் பயன்பெறும் மாநிலம் கேரளம்தான். அதன் பின்னர்தான் தமிழ்நாடு, கர்நாடா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பயன்பெறும்.

 21 districts in TN are likely to receive moderate rain in the next 2 hours: Meteorological Department

ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைந்ததால் பல இடங்களில் வெயில் வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் 90 சதவிகிதமும், அதற்கு முன்னர் ஜூன் மாதத்திலும் பருவமழை 65 சதவிகிதம் என மொத்தமாக இந்த முறை பருவமழை 45 சதவிகிதம் குறைந்திருக்கிறது. இதேபோல கர்நாடக மாநிலத்தை பொறுத்த அளவிலும் பருவமழை குறைந்ததால் கிருஷ்ணராஜ சாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு போதுமான நீர் வரத்து குறைந்தது.

இருப்பினும் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியிருந்தது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் 239.9 மி.மீ (76% கூடுதல் மழை), செங்கல்பட்டு மாவட்டத்தில் 107.3 மி.மீ (16% குறைவு), காஞ்சிபுரத்தில் 158.5 மி.மீ (12% கூடுதல்) என தமிழ்நாடு முழுவதும் பரவலாக 95 சதவிகிதம் மழை கூடுதலாக பெய்திருக்கிறது. இந்நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 7 மணியளவில் தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதாவது, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, சேலம் மற்றும் தர்மபுரி அகிய 21 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையை பொறுத்த அளவில், அதன் சுற்றுவட்ட பகுதிகளான மதுராந்தகம், தாம்பரம், திருப்போரூர், வண்டலூர், சோழிங்கநல்லூர், திருக்கழுகுன்றம் போன்ற பகுதிகளிலும் இரவு 7 அளவில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+