சென்னை உள்பட 21 மாவட்டங்களில் பெய்யப்போகும் மழை.. மாலை 6 மணிக்குள் நடக்கும் மாற்றம்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணிக்குள் சென்னை உள்பட 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. மதிய வேளையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வீடுகளில் ஏசி, ஃபேன் இல்லாமல் இருக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே தான் சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை என்பது பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில இடங்களில் இன்று மதியம் மழை பெய்தது.
இதன் தொடர்ச்சியாக தான் சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாலை 6 மணிக்குள் தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் மாலை 6 மணிக்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications