சென்னைக்கு 680 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது.. வானிலை ஆய்வு மையம்
சென்னை: சென்னைக்கு 680 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது என்றும், இன்று காலை 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 11 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போதுவடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்து வருகிறது. கடந்த மாதத்தின் 2-வது வாரத்தில் இருந்தே சூடுபிடித்த பருவமழை தமிழகம் முழுவதும் தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில்தான், தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றுழுத்த தாழ்வு பகுதி டிசம்பர் 3-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என்று முதலில் கணிக்கப்பட்டு இருந்தது.

மேலும், வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் தமிழகத்தை நோக்கி வரக்கூடும். மிக்ஜாம் (Cyclone Michaung) என பெயரிடப்பட்ட இந்த புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி வரும் என்றும் தகவல் வெளியானது. இந்தப் புயல் தமிழகத்தை நோக்கி வரும்போது கனமழை முதல் மிக கனமழை வரும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.
இது புயலாக உருவாகி வரும் 4ஆம் தேதி சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலையில் அறிவித்திருந்தது. இந்த நிலையில், புயல் கரையை கடக்கும் நாள் தாமதம் ஆகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருந்ததாவது:-
வங்கடலில் உருவாகும் மிக்ஜாம் புயலானது டிசம்பர் 4ஆம் தேதி தெற்கு ஆந்திரா வட சென்னைக்கு அருகே நகர்ந்து வரக்கூடும் இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மெதுவாக நகர்ந்து டிசம்பர் 5ஆம் தேதியன்று காலையில் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை- மசூலிப்பட்டினம் இடையே முதலில் புயல் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆந்திராவின் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் இடம் மாறினாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருந்தது.
இந்த நிலையில், சென்னைக்கு 680 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னைக்கு 680 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது. இன்று காலை 13 கி.மீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வந்தது. ஆனால் தற்போது மணிக்கு 11 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications