ராமேஸ்வரத்தில் தொடரும் கனமழை.. தீவுப் பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
ராமேஸ்வரம்: மேகவெடிப்பு காரணமாக கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒருநாள் மட்டும் (நவம்பர் 22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பன், தங்கச்சிமடம், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவமழை தீவிரமடைவது இயல்புதான். அதேபோல இந்த ஆண்டும் கடந்த அக்டோபரில் தொடங்கிய பருவமழை தற்போது வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவிலான மழை பெய்துள்ளது.

ராமேஸ்வரத்தில் மேக வெடிப்பு காரணமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி கடல்போல காட்சியளிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 35 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இது சராசரியைவிட மிகவும் அதிகமான மழை அளவாகும். மேக வெடிப்பு காரணமாக இதுபோன்ற பெருமழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், ராமேஸ்வரத்தில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொண்டியில் 11 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை பெய்து வருவதால் ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை (நவம்பர் 22) அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருமழை காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள தீவுப் பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று (நவம்பர் 22) ஒருநாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கன மழை பெய்து வரும் நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் விடுமுறை அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பாம்பன், தங்கச்சிமடம், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் பகுதியில் இதுவரை காணாத அளவுக்கு தொடர்ந்து அதிகனமழை பெய்து வருகிறது. இந்த பெருமழைக்கு மேக வெடிப்பு நிகழ்வுதான் காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நிகழ்வு மிகவும் அரிதானதாகும். பொதுமவாக மலை பிரதேசங்களில்தான் மேகவெடிப்புகள் ஏற்படும் நிலையில், ராமேஸ்வரத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வளிமண்டலத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு ஈரப்பதம் இருந்தால் வளிமண்டல இடையூறு ஏற்படுவது வழக்கம். அதாவது மலைகள் மீது காற்று வேகமாக மோதி மேலெழும்பும். இது ஏற்கெனவே பலவீனமாக உள்ள மேக கூட்டத்தை பாதித்து மழையாகப் பெய்யும். இதுதான் மேகவெடிப்பு என்று குறிப்பிடுகின்றனர். மேக கூட்டங்கள் வலுவாக இருந்து பெரும் மழையாக பொழிந்தால் அதை சூப்பர் மேக வெடிப்பு என்று குறிப்பிடுகிறார்கள்.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications