இன்று கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கேரளாவுக்கு 3 நாட்கள் ரெட் அலர்ட்
சென்னை: அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றதாகவும், இன்றே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுவதாகவும், தமிழகத்தில் கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் அதி கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், நெல்லை, தென்காசி, குமரி, திருப்பூர், தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.

இன்று கரையை கடக்கும்
தென்மேற்கு பருவமழை கேரளாவில் இன்று அல்லது நாளை தொடங்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. வழக்கத்தை விட இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது. எனினும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்பே பெங்களூர், கேரளா, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.
அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றதாகவும், இன்றே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையினையும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கேரளாவுக்கு 3 நாட்கள் ரெட் அலர்ட்
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், "அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. ரத்தினகிரிக்கும் டபோலிக்கும் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பல இடங்களில் அதிகனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. குறிப்பாக கேரளாவின் காசர்கோடு, கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படுகிறது.
கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்
தமிழகத்தை பொறுத்தவரை இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மலைப்பகுதியை ஒட்டி உள்ள இடங்களில் அதி கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்படுகிறது. நெல்லை, தென்காசி, குமரி, திருப்பூர், தேனி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படுகிறது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை அடுத்து கேரளாவில் குவாரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் குவாரிகள் செயல்பட அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் திருப்பூரில் உடுமலை அருகே உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
-
கோவை சிறுமி விவகாரம்! வாழறதுக்கே தகுதி இல்லாதவர்கள்! எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளிப்பு -
'கடும் தண்டனை பெற்றுத் தரப்படும்.. கோவை சிறுமியின் பெற்றோரிடம் போனில் பேசிய முதல்வர் விஜய் -
சூலூர் சிறுமி கொலை வழக்கு! ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறலையே! விஜய் ஆட்சியிலும் இப்படிதானா? சீமான் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications