அதிர்ச்சி சம்பவம்.. வானில் தோன்றிய 4 மர்ம ஒளி! இங்கும் அங்கும் "பேயாட்டம்".. பீதியில் சென்னை மக்கள்
சென்னை: சென்னையில் நேற்று வானில் மாறி மாறி வெளிச்சம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெளிச்சம் பலருக்கும் சந்தேகத்தை, குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சென்னையில் நேற்று தாம்பரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. சரியாக மழை பெய்வதற்கு முன் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதன்படி மழை பெய்வதற்கு முன் சென்னை வானத்தில் திடீரென 2 வெளிச்சம் தோன்றியது.

வானத்தில் இருந்து யாரோ டார்ச் அடிப்பது போல் வெளிச்சம் வந்துள்ளது. அதன்பின் இரண்டு வெளிச்சம் மீண்டும் வந்துள்ளது. மொத்தம் 4 வெளிச்சம் இங்கும் அங்கும் மாறி மாறி தோன்றி உள்ளது. வானத்தில் வெளிச்சம் பேயாட்டம் ஆடுவது போல இந்த வெளிச்சம் இங்கு அங்கும் ஆடி உள்ளது.
மேகத்திற்கு மேலே இருந்து கொண்டு கீழே யாரோ டார்ச் அடித்தது போல இந்த வெளிச்சம் வந்துள்ளது. இது என்ன வெளிச்சம் என்று தெரியாமல் மக்கள் குழம்பி உள்ளனர். அதன்பின் மழை வந்ததும் இந்த வெளிச்சம் சட்டென காணாமல் போய் உள்ளது.
மேலே விமானம் எதுவும் செல்லவில்லை, கீழே இருந்து வெளிச்சம் செல்லவில்லை. அப்படி இருக்க இந்த வெளிச்சம் எங்கிருந்து வந்தது என்று தெரியாமல் மக்கள் குழம்பி உள்ளனர். இந்த வெளிச்சம் மறைந்த பின் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று இரவில் தாம்பரத்தில் தீவிர மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
14.09 2023 முதல் 18.09 2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
14.09.2023 முதல் 16.09.2023: தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தென்கிழக்கு வங்கக்கடல் - தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.












Click it and Unblock the Notifications