இந்த ஒரு போட்டோவை பாருங்க.. ஆஹா.. கனிமொழியா இது.. காலத்திற்கும் நிற்க போகும் சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடிக்கு எம்பி கனிமொழி சென்று மீட்பு பணிகளை கவனித்து வருகிறார். அங்கே அவர் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் கவனம் பெற்று வருகின்றன. அதிலும் நேற்று பெரும் வெள்ளத்தில் அவர் துணிச்சலாக செய்த மீட்பு நடவடிக்கை ஒன்று பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றுள்ளது.

தென் தமிழ்நாட்டில் பெய்யும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கே மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இன்னும் அங்கே வெள்ளம் முழுமையாக வடியவில்லை. சில இடங்களில் 10 அடிக்கு கூட வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. தற்போது தென் மாவட்டங்களை நோக்கி அதிகாரிகள் அனுப்பப்பட்டு உள்ளனர். அதேபோல் விரைவில் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் தென் மாவட்டங்களை நோக்கி செல்ல தொடங்கி உள்ளனர்.

A picture of Kanimozhi is trending in social media during her daring rescue operation in Tuticorin

கன்னியாகுமரி - திரு. சு. நாகராஜன் இ.ஆ.ப., நில நிர்வாக ஆணையர்.

திருநெல்வேலி- - டாக்டர் இரா. செல்வராஜ். இ.ஆ.ப., அரசு செயலாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை

தூத்துக்குடி - திருமதி.பா.ஜோதி நிர்மலா இ.ஆ.ப., அரசு செயலாளர். வணிகவரித் துறை

A picture of Kanimozhi is trending in social media during her daring rescue operation in Tuticorin

தென்காசி - திரு.சுன்சோங்கம் ஜதக் சிரு, இ.ஆ.ப., அரசு செயலாளர். சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் அமைச்சர்கள், திமுக மூத்த தலைவர்களும் சிலரும் விரைவில் நெல்லையை நோக்கி விரைய உள்ளனர்.

அமைச்சர்கள் சென்றனர்; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெல்லைக்கு ஏற்கனவே சென்று உள்ளார். நேற்று சேலத்தில் இருந்தார். அங்கே திமுக மாநாட்டு பணிகளை நேற்று பார்வையிட்டார். இந்த நிலையில் பிற்பகல் நெல்லைக்கு வந்தார்

A picture of Kanimozhi is trending in social media during her daring rescue operation in Tuticorin

அமைச்சர்கள் உடனே நெல்லைக்கு புறப்பட வேண்டும், தென் மண்டல எம்பிக்கள் தென் தமிழ்நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். அதன் அடிப்படையில் உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் நெல்லைக்கு சென்றனர்.

கனிமொழி வந்தார்: இன்னொரு பக்கம் டெல்லியில் இருந்து அவசர அவசரமாக தூத்துக்குடிக்கு எம்பி கனிமொழி நேற்று காலை வந்தார் . அங்கே மீட்பு பணிகளை கவனித்து வருகிறார். டெல்லியில் குளிர்கால கூட்டத்தொடருக்காக இருந்த கனிமொழி அவசரமாக தூத்துக்குடிக்கு வந்தார்.

அங்கே சாலைகளில் தேங்கி இருக்கும் வெள்ளத்தை பார்வையிட்டார். சாலையில் வெள்ளம் தேங்கி இருக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டார்.

A picture of Kanimozhi is trending in social media during her daring rescue operation in Tuticorin

கனிமொழி போட்டோ டிரெண்டிங்; நேற்று தூத்துக்குடிக்கு எம்பி கனிமொழி சென்று மீட்பு பணிகளை கவனித்து வருகிறார். அங்கே அவர் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் கவனம் பெற்று வருகின்றன. அதிலும் நேற்று பெரும் வெள்ளத்தில் அவர் துணிச்சலாக செய்த மீட்பு நடவடிக்கை ஒன்று பெரிய அளவில் வரவேற்புகளை பெற்றுள்ளது.

முட்டி வரை இருந்த வெள்ளத்தில் நடந்து சென்று மக்களை அவர் மீட்க உதவினார். அந்த சாலையில் வெளிச்சம் இல்லை. நல்ல இருள். அங்கே தண்ணீரும் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தது. எங்கே என்ன இருக்கிறது என்று தெரியாத சூழல். இப்படிப்பட்ட நிலையில் அதிகாரிகளை சேர்த்து அழைத்துக்கொண்டு அவர் துணிச்சலாக மிதந்தபடி சென்று தண்ணீரை கடந்து மீட்பு பணிகளை மேற்கொண்டார். அவரின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+