இந்த ஒரு மாவட்டத்திற்கு மட்டும் லேசான மழை.. மற்றபடி தமிழகம் முழுவதும் வெப்ப அலைதான்! வெதர் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் வரும் மே மாதம் 1ம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும் என்று கூறி மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கிறது.
அதாவது, "தமிழகத்தில் மே மாதம் 1ம் தேதி வரை வெயில் அதிகமாக இருக்கும். அதேபோல, தென் மாவட்டங்களில் லேசான மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். மற்றபடி அனைத்து மாவட்டங்களிலும் அடுத்த 4 நாட்களுக்கும் வானிலை இப்படித்தான் இருக்கும். 5வது நாள், அதாவது மே 2ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும்.

அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்த அளவில், அடுத்த 5 நாட்களுக்கு உள் தமிழகத்தில் 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகமாக இருக்கும். இதே வட உள் மாவட்டங்களில் 3-5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கும். அதாவது உள் மாவட்டங்களில் 102-109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் பதிவாகும். மற்ற பகுதிகளில் 95-102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும்.
வெப்ப அலையை பொறுத்த அளவில், இன்று தொடங்கி ஏப்.30ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக வெப்ப அலை வீசும். எனவே வெப்ப அலை குறித்து மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. மே.1ம் தேதி தமிழகத்தின் வட உள் மாவட்டங்களுக்கு வெப்ப அலை குறித்து ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 108.32 டிகிரி ஃபாரன்ஹீட் அளவும், அதற்கடுத்தபடியாக சேலத்தில் 107.42, திருப்பத்தூரில் 107.24 என வெயில் வாட்டி எடுத்திருக்கிறது. அதற்கடுத்தபடியாக கரூர் பரமத்தியில் 106.7, திருத்தணியில் 106.16, வேலூரில் 105.98, நாமக்கல்லில் 104, திருச்சியில் 103.46 என வெயில் பதிவாகியுள்ளது" என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வழக்கமாக தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில்தான் வெயில் அதிகரிக்கும். ஆனால், இந்த முறை பிப்ரவரி இறுதியிலேயே வெயில் வாட்ட தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு பருவமழை ஓரளவு கை கொடுத்தாலும், இந்த ஆண்டின் கோடை காலம் வறட்சியை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. எனவே வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது.
கடந்த ஆண்டுதான் எல்-நினோ முடிவுக்கு வந்திருக்கிறது என்பதாலும் வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு தீவிரமாக இருக்கிறது. பருவமழை இந்த ஆண்டு ஜூன் தொடக்கத்தில் தலை காட்டும் என்று வானிலை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications