நியூ இயருக்கு கவனமா இருங்க.. தென் மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த வார்னிங்! முழு விவரம்
சென்னை: தென் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த மழை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் இந்த பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வருகின்றன. இந்நிலையில் தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
டிச. 16 மற்றும் 17ம் தேதிகளில் தென் மாவட்டங்களில் அதீத கனமழை கொட்டி தீர்த்ததால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் வெள்ள காடாக மாறின. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு வரும் நீரின் அளவு வேகமாக உயர்ந்ததால் அதிலிருந்து அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இத்துடன் காட்டாற்றுப் பகுதிகளில் இருந்து ஓடி வந்த வெள்ள நீரும், சிற்றாற்று வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுவே இரண்டு மாவட்டங்களில் வெள்ளம் சூழு காரணம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், ஆதிச்சநல்லூர், பொன்னன்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, முக்காணி, ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், அகரம், பால்குளம், குரும்பூர், சோனகன்விளை, அம்மன்புரம் 100க்கும் அதிகமான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.
வெள்ளத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. கால்நடைகள், மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக மழை வெள்ளம் இணைப்பு சாலைகளை அடித்து சென்றதால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து இந்த இரண்டு மாவட்டங்களும் தற்போதுதான் மெல்ல மீண்டு வருகின்றன.
இந்நிலையில் தென் மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. தென் மாவட்டங்களான கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
நாளையும், நாளை மறுநாளும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோல புத்தாண்டு தினமான 1ம் தேதியும், அடுத்த நாளான 2ம் தேதியும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
இந்த இரண்டு நாட்களும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மீண்டும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் தென் மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications