ரஜினியின் வீட்டு கிட்ட திடீர் பள்ளம்.. தொப் தொப்பென விழுந்த கார், ஆட்டோ.. போயஸ் கார்டனில் ஒரே அலறல்
சென்னை: சென்னையில் வெளுத்து வருகிறது மழை.. இந்த மழையில் சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு வருகின்றன.. அந்தவகையில், நடிகர் ரஜினி வீட்டருகே, பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பலத்த மழை கொட்டி வருவதால், சென்னையே தனித்தீவு போல காணப்படுகிறது.. சாலைகளில் எல்லாம் நீர் பெருக்கெடுக்கிறது.. இடுப்பு வரை தண்ணீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்-

சென்னை: சென்னை மயிலாப்பூர், பட்டினம்பாக்கம், ராயப்பேட்டை, சாந்தோம், மந்தைவெளி, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, தி.நகர், வடபழனி, வள்ளுவர் கோட்டம், அடையாறு, திருவான்மியூர், கிண்டி, அசோக் நகர், கே.கே.நகர், சாலிகிராமம், வளசரவாக்கம், கோடம்பாக்கம், பகுதிகளின் சாலைகளில் மழைநீர் சூழ்ந்து கொண்டுள்ளது.
கோயம்பேடு, முகப்பேர், அண்ணாநகர், அமைந்தகரை, பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம், பாரிமுனை, சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் ஆவடி, சோழவரம், செம்பரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், கொட்டூர், பூண்டி, பகுதிகளின் சாலைகள் மொத்தமும் தண்ணீரால் மூழ்கியுள்ளது.
தாம்பரம்: தாம்பரத்தில் 7 வழித்தடங்களில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. தாம்பரத்தில் ஜிஎஸ்டி சாலை, வேளச்சேரி பிரதான சாலை, ஓஎம்ஆர் சாலை, இசிஆர் சாலை மற்றும் முக்கிய சாலைகளில் பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக ஆங்காங்கே மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாலைகளில் முறிந்துள்ளன.
சென்னை வேளச்சேரியில் 5 பரலாங் சாலையில் 40 அடி பள்ளத்தில் இன்று காலை 5 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.. அதேபோல, அசோக் லைலேண்ட் நிறுவனத்தால் கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் பள்ளத்தில் தொழிலாளர்கள் உள்ளே விழுந்தனர்.
வாகனங்கள்: சாலைகளில் ஆங்காங்கே பள்ளச்சாிவுகளும் , குழிகளும் ஏற்பட்டு வருகின்றன.. அதேபோல, மழை நீா் பள்ளத்திற்குள் சென்று காா், வேன் ஆகிய வாகனங்களும் கவிழ்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அந்தவகையில், சென்னை போயஸ் காா்டனில் உள்ள, நடிகா் ரஜினிகாந்த் வீட்டிற்கு அருகேயும் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.. ரஜினி வீட்டுக்கு அருகே உள்ள, கஸ்தூாி ரங்கன் சாலையில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, திடீர் பள்ளம் உருவாகிவிட்டது.
அதிர்ச்சி: இந்த, பள்ளத்திற்குள்ளும் 2 காா், 1 ஆட்டோ , 1 கிரேன் போன்றவை விழுந்துள்ளதாக தெரிகிறது. இதை கேள்விப்பட்டதுமே, அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.. இதையடுத்து பள்ளத்தில் விழுந்த வாகனங்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினா் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை போயஸ் கார்டன் பகுதியில் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications