பெங்களூரை மொத்தமாக நனைத்த மழை! உள்ளம் குளிர்ந்த மக்கள்.. 5 மாதங்களுக்கு பிறகு நிம்மதி பெருமூச்சு
பெங்களூர்: குடிநீர் பஞ்சம் என தத்தளித்து வந்த பெங்களூரில் 5 மாதங்களுக்கு பிறகு தற்போது மழை பெய்திருக்கிறது. அடுத்து வரும் நாட்களிலும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவின் டெக் நகரமான பெங்களூர் தற்போது தண்ணீரின்றி தவித்து வருகிறது. ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தை பொறுத்த அளவில் 236 தாலுகாக்களில் 223 தாலுகாக்கள் வறட்சியால் தத்தளிக்கின்றன, அவற்றில் 219 மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். வழக்கமாக இதுபோன்ற வறட்சி காலங்களில் தனியார் டேங்கர் லாரிகளை மக்கள் நாடுவார்கள். ஆனால் இந்த முறை தனியார் டேங்கர் உரிமையாளர்களே தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.

பெங்களூரில் 14,000 ஆழ்துளை கிணறுகளிலிருந்து, 4000 டேங்கர் லாரிகள் தண்ணீரை எடுத்து சப்ளை செய்கின்றன. ஆனால் இந்தமுறை சுமார் 7000 ஆழ்துளை கிணறுகள் வறண்டுவிட்டன. எனவே மொத்த தண்ணீர் விநியோகத்தில் 50 சதவிகிதம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் டேங்கர் லாரி தண்ணீரின் விலையும் உயர்ந்திருக்கிறது. எப்போதும் ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ.500-600 வரை விற்பனையாகும். ஆனால் தற்போது ரூ.2000ஆக இது உயர்ந்திருக்கிறது.
பெங்களூருக்கு ஒவ்வொரு நாளும் 260 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 147 கோடி லிட்டர் காவிரி ஆற்றிலிருந்து பெறப்படுகிறது. அதேபோல 65 கோடி லிட்டர் ஆழ்துளை கிணற்றிலிருந்து கிடைக்கிறது. மொத்தம் சேர்த்தால் 210-212 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. எனவே 50 கோடி லிட்டர் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ஏறத்தாழ 5 மாதங்களுக்கு பிறகு தற்போது பெங்களூரில் மழை பெய்திருக்கிறது. இது குறித்து பெங்களூர் மக்கள் கூறுகையில், “கடைசியாக நாங்கள் நவம்பர் 21ம் தேதி மழையை பார்த்தோம். அதன் பின்னர் இப்போதுதான் மழை பெய்கிறது. இந்த முறை கோடை காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெப்பம் பதிவாகியிருந்தது. பலர் குடிநீர் பிரச்னையாலும், வெயிலின் தாக்கத்தாலும் பெங்களூரிலிருந்து வெவ்வேறு நகரங்களுக்கு சென்றுவிட்டனர்.
இப்போது பெய்திருக்கும் மழை நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இதேபோன்று மழை தொடர்ந்தால் பெங்களூர் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பிடும். எங்களுடைய எதிர்பார்ப்பும் இதுதான்” என்று கூறியுள்ளனர்.
தற்போது பெய்திருப்பதை போன்று அடுத்து வரும் நாட்களிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். எனவே பெங்களூர் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications