சென்னை, திருவள்ளூரில் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு.. 6 முக்கியமான அறிவிப்பு.. இதை நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று வெள்ளத்திற்கு பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளின் தூய்மைப் பணிக்காக ஒரு கோடியே 90 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

After the flood, Chennai, Thiruvallur schools reopen today: 6 important announcements and guidelines

'மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம். மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் பள்ளிகளுக்கு 04.12.2023 முதல் 09.12.2023 வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரைகளின்படி, 'மிக்ஜாம்' புயல் மழையினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி வளாகங்களை சுத்தம் செய்து, வரும் 11.12.2023 (திங்கட்கிழமை) அன்று பள்ளி திறக்கும் நாளில் நல்ல கற்றல் சூழலை உருவாக்கும் விதமாக பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.இவற்றைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையைச் சார்ந்த 17 அதிகாரிகள் 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நிதி ஒதுக்கீடு: இப்பணிகளுக்காக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாயும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 40 இலட்சம் ரூபாயும், ஆக மொத்தம் ஒரு கோடியே 90 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட இழந்த மாணவர்களுக்கு. பள்ளிகள் திறந்தவுடன் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை மற்றும் புத்தகப்பை போன்ற பொருட்களை வழங்க நாளை (திங்கள்கிழமை -11.12.2023) மாணவர்களின் தேவைகளைக் கண்டறிந்து, (செவ்வாய்க்கிழமை - 12.12.2023) அன்று பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகம் உள்ளிட்டவை வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கெனவே, 13.12.2023 அன்று அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில், புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக வேண்டும்.

தேர்வுகள் ஒத்திவைப்பு: புயல் காரணமாக தமிழ்நாட்டில் இன்று தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் அனைத்து மாவட்டங்களிலும் 2 நாட்கள் ஒத்திவைக்கப்படுகின்றன. மழை வெள்ளத்தால் 4 மாவட்டங்களில் புத்தகங்கள் சேதமான நிலையில் மாணவர்கள் சிரமப்படுவார்கள் என்பதால் அரையாண்டுத் தேர்வுகளை, புதன்கிழமை (டிசம்பர்-13) தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

வழிகாட்டு நெறிமுறை: திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று வெள்ளத்திற்கு பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.

1. பள்ளிகளின் சுவர்கள் பாதுகாப்பாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

2. பள்ளிகளுக்கு உள்ளே வகுப்பறைகளில் மின்கசிவு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இருக்கும் பட்சத்தில் அதை சரி செய்ய வேண்டும்.

3. ஈரமாகி சுவர்கள் இருந்தால் அங்கே வகுப்புகளை நடத்த கூடாது.

4. மொத்தத்தில் பள்ளிகள் சுத்தமாக உள்ளதா என்று பார்க்கக் வேண்டும்.

5. பள்ளிக்கு அருகே முட்புதர்கள் இருந்தால் அதை நீக்க வேண்டும்.

6. பள்ளிக்கு உள்ளே தண்ணீர் இருந்தாலும் அதை பற்றி புகார் அளிக்க வேண்டும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+