அடுத்த 2 மணி நேரம்! விடாமல் வெளுக்க போகுது மழை.. சென்னை, திருவள்ளூர் உள்பட 14 மாவட்டங்களுக்கு அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்தது. எனினும் சென்னை புறநகர் பகுதிகளில் இன்று மதியத்திற்கு பிறகு மழை பெய்தது. மதிய நேரங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று மாலை மழை பெய்ய தொடங்கியது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Rain Chennai

சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இரவு 7 மணி வரை

இதேபோன்று இன்று இரவு 7 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழகத்தில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் 65 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

14 ஆம் தேதி வரை

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 08-07-2025 மற்றும் 09-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

10-07-2025 முதல் 14-07-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் எப்படி?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (08-07-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை (09-07-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை இருக்கக்கூடும். காணப்படும். நகரின் ஒருசில அதிகபட்ச வெப்பநிலை 38-39" 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை

08-07-2025 முதல் 10-07-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 08-07-2025 முதல் 10-07-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

08-07-2025 முதல் 10-07-2025 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3" செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+