"அக்னி நட்சத்திரம்.." 25 நாட்களுக்கு சம்பவம் இருக்கு.. வதைக்க காத்திருக்கும் கத்திரி வெயில்.. உஷார்
சென்னை: இதுவரை பார்த்தது வெறும் ட்ரெயிலர்தான், இனிதான் மெயின் பிக்ச்சரே இருக்கு என்று சொல்லும் அளவுக்கு மக்களை பயம் காட்ட வர இருக்கிறது அக்னி நட்சத்திரம் எனக் கூறப்படும் கத்திரி வெயில் காலம். நாளை மறுநாள் தொடங்கும் அக்னி நட்சத்திரம் அடுத்த 25 நாட்களுக்கு உக்கிரம் காட்ட உள்ளது.
கோடை வெயில் இந்த ஆண்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் தனது கோரமுகத்தை காட்டத்தொடங்கிய வெயில்.. ஏப்ரல் முழுவதும் உக்கிரமாக இருந்தது. இதனால், மக்கள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகினர். அதிலும் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இயல்பை விட இந்த ஆண்டு மிக அதிகமாக வெப்பம் நிலவியதால் மக்கள் தவித்து வருகிறார்கள்.

அக்னி நட்சத்திரம்: கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே யோசிக்கும் அளவுக்கு வெப்பம் தகிக்கிறது. நீர் ஆகாரங்கள் அதிகம் உட்கொண்டு வெயிலின் தாக்கத்தை சமாளித்து வருகிறார்கள். இதுவரை பார்த்தது வெறும் ட்ரெயிலர்தான் இனிதான் மெயின் பிக்ச்சரே இருக்கு என்று சொல்லும் அளவுக்கு மக்களை பயம் காட்ட வர இருக்கிறது அக்னி நட்சத்திரம் எனக் கூறப்படும் கத்தரி வெயில் காலம்.
நாளை மறுநாள் முதல்: வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கத்திரி வெயில் காலம் என்று சொல்வார்கள். வானிலை ஆய்வு மையத்தை பொறுத்தவரையில் கத்தரி வெயில் என்ற வார்த்தையை பயன்படுத்துவது கிடையாது. வானிலை மையம் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம் என்றே சொல்கிறது.
எனினும், தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் கணக்கிடப்பட்டு வருகிறது. அதன்படி பார்த்தால், இந்த ஆண்டு கத்தரி வெயில் நாளை மறுதினம் (4ஆம் தேதி) தொடங்குகிறது. இந்த கத்திரி வெயில் காலம் வரும் 28 ஆம் தேதி வரை அதாவது, 25 நாட்கள் தொடர்ந்து வாட்டி வதைக்கும்.
தென் மாவட்டங்களில் எப்படி?: பொதுவாக கோடை வெயிலின் உக்கிரம் இந்த கத்திரி வெயில் கால கட்டத்தில் தான் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெயில் அனலாய் கொதிக்கிறது. சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 105 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது.
ஊட்டியில் கூட இதுவரை இல்லாத அளவு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோடை மழையும் இந்த ஆண்டு போதிய அளவு பெய்யவில்லை. சென்னையில் ஒரு சொட்டு மழை கூட இப்போது வரை பெய்யவில்லை. தென் மாவட்டங்கள் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்தது.
மழைக்கு வாய்ப்பு இருக்கா?: எனினும், வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வர்லர்களும் கணித்துள்ளனர். இது மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கொடுத்தாலும், கோடை மழை ஏமாற்றினால் கத்தரி வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட மேலும் அதிகரித்து காணப்படும். இதனால் மக்கள் கதி கலங்கியுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications