உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. மறுபடியும் முதல்ல இருந்தா.. தென்தமிழகத்தில் ஸ்பீடு பணிகள்
சென்னை: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால், தென்மண்டலமே கலங்கி போய் உள்ளது.. மற்றொருபுறம், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.
வங்கக்கடலில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் டிசம்பர் 27 முதல் வரும் ஜனவரி 2ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
மீண்டும் மழை: அதுமட்டுமல்லாமல், நாளை 31ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தென்கிழக்கு வங்கக் கடலின் தெற்கு பகுதி மற்றும் அதை ஒட்டி உள்ள தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் மேலும் அதிகரித்து மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த நாட்களில் மீன் பிடிக்க செல்ல செண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், இன்னொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அறிவிப்பு: அந்த அறிவிப்பில், "வடகிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இந்திய பெருங்கடல் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிவரை இந்த மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 3-ந் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஜனவரி 1 மற்றும் 2-ந் தேதியில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது.
தென் மாவட்டம்: எனவே, மீண்டும் தென் மாவட்டங்களில் பலத்த மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டு இருப்பதால், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லையில் இயல்பு நிலை இன்னும் திரும்பாதநிலையில், வெள்ளநீரும் முழுமையாக வடியாத நிலையில், பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுமே அலர்ட் ஆகியுள்ளன.. பேரிடர் மேலாண்மை வீரர்கள், தீயணைப்பு வீரர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..
நெல்லை: அதேபோல, நெல்லையை பொறுங்ததவரை, தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள், அணைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, அனைத்து துறை அதிகாரிகளும், ஊழியர்கள் 30, 31 மற்றும் 1-ந் தேதிகளில் அலுவலகங்களில் இருக்க வேண்டும் என்றும் யாரும் விடுப்பு எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்ததால், இன்றைய தினம் விடுமுறையை தவிர்த்து ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications