அரபிக் கடலில் மாற்றம்.. ஆரம்பித்த தென்மேற்கு பருவமழை.. "உடனே கரைக்கு வாங்க".. மீனவர்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மைத்துறை முக்கிய உத்தரவினை வெளியிட்டிருக்கிறது. அத்துடன் மீனவர்களுக்கான எச்சரிக்கையையும் அறிவித்திருக்கிறது.
தென்மேற்கு பருவ மழை, கடந்த மே 19ம் தேதி அந்தமான் மற்றும் மாலத்தீவு பகுதியில் துவங்கியது என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது. "மே 31ம் தேதி கேரளாவில் தென் மேற்கு பருவமழை துவங்க சாதகமான சூழல் நிலவுகிறது. இந்த ஆண்டு 3 நாட்களுக்கு முன்கூட்டியே பருவமழை துவங்கி உள்ளது" என்று இது குறித்து இந்திய வானிலை மையம் கூறியிருந்தது.

தென்மாவட்டங்கள்: இதையடுத்து, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றினை நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தது. அதில், தென்மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 22ம் தேதி வரை, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், வரும் 22ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை, பொதுவாக இயல்பை விட குறைவாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு, ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வங்காள விரிகுடா: வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில், வரும் 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இது, வடகிழக்காக நகர்ந்து, 24ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, 22ம் தேதி வரை, குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய தென் மாவட்ட கடலோரப் பகுதிகள், கேரள, கர்நாடகா கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில், மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ., வேகத்திலும் காற்று வீசக்கூடும் எனபதால், இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டிருந்தது.
வெள்ள பாதிப்பு: இதையடுத்து, தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்ள, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்டங்கள் முன்னெடுத்து வருகின்றன..
வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க, திருமண மண்டபங்கள், சத்துணவு கூடங்கள், சமுதாய கூடங்களை தேர்வு செய்து, தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய தனித்தனி குழுக்கள் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நிவாரண முகாம்கள்: நிவாரண முகாம்களில் குடிநீர், மின்சாரம், படுக்கை விரிப்புகள், மெழுகுவர்த்திகள் போன்ற பொருட்கள் தயாராக இருக்க வேண்டும், பொது வினியோக பொருட்கள் போதுமான அளவு இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றெல்லாம் மாவட்ட நிர்வாகங்கள், அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில், பேரிடர் மேலாண்மைத்துறை முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.. ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் மே 23ம் தேதிக்குள் கரை திரும்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னெச்சரிக்கை: இதுகுறித்து பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடலோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கு எச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.. பலத்த காற்று, கடல் அலை சீற்றம் குறித்தும் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்படுகிறது.
கனமழை எச்சரிக்கை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுலாத் தலங்களுக்கு செல்வோர் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்.. தமிழ்நாட்டில் கனமழை காரணமாக 16.05.2024 முதல் 20.05.2024 முடிய மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்" என்று பேரிடர் மேலாண்மைத்துறை தகவல் வெளியிட்டு, எச்சரித்திருக்கிறது.
அரபிக்கடல்: கடந்த வருடம், அரபிக் கடலில் நிலவிய காற்று சுழற்சி காரணமாக பருவமழை தாமதமாக தொடங்கியிருந்தது.. இந்த முறை, தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்க வாய்ப்புள்ளாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.. அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications