ரோட்டில் போன காரே மூழ்கிப்போச்சு.. பெங்களூரை புரட்டிப்போட்ட கனமழை! ஷாக் வீடியோ.. டிராபிக் மாற்றம்
பெங்களூர்: பெங்களூர் நகரில் நேற்று இரவு பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் எம்ஜிரோட்டை சுற்றிய பல இடங்களில் வெள்ளம்போல் மழைநீர் தேங்கி இருக்கிறது. இத்தகைய சூழலில் தான் மழைநீரில் ரோட்டில் போன காரே மூழ்கிப்போன ஷாக் வீடியோவை பெங்களூர் மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை என்பது போதிய அளவு பெய்யவில்லை என கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழையில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் பல அணைகளில் நீர்மட்டம் என்பது சரிந்துள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு செய்து கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் நேற்று பெங்களூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் திடீரென மழை பெய்தது.
அதாவது நேற்று இரவு முதல் பெங்களூர் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் லேசானது முதல் மிதமான அளவுக்கு மழை பெய்தது. பல இடங்களில் விட்டு விட்டும், சில இடங்களில் தொடர்ந்தும் இரவில் மழை பெய்தது. இதனால் இன்று காலையில் பெங்களூரில் பல சாலைகளில் தண்ணீர் தேங்கியது. தாழ்வான பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி உள்ளது.
குறிப்பாக பெங்களூர் நகரின் மையப்பகுதியாக உள்ள எம்ஜி ரோட்டை சுற்றிய இடங்களில் மழைநீர் தேங்கியது. அதன்படி குயின்ஸ் சர்க்கிள், வின்ட்சர் மேனர் பாலம், கண்டோன்மென்ட் ரயில்வே சுரங்கபாதை, சேத்திரபுரம் நேரு சர்க்கிள், பல்லாரி ரோட்டில் உள்ள பிடிஏ ஜங்ஷன், ஜெயமஹாலில் உள்ள சிக்யூஏஎல் கிராஸ், மற்றும் பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்தின் அருகே குரோமா சர்வீஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியிருந்தது.

குறிப்பாக பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்தின் அருகே குரோமா சர்வீஸ் ரோட்டில் சுரங்கப்பாதையில் மழைநீர் ஒரு காரை மூழ்கடித்து சென்றது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதனால் பெங்களூர் மாநகர போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் சார்பில் இந்த சாலையை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. அதோடு இந்த சாலைக்கு பதில் பொதுமக்கள் பானத்தூர் ரயில்வே சப்-வேயை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அடுத்த 24 மணநேரத்துக்கு பெங்களூர் நகரில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதேபோல் சில இடங்களில் மழையும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 29 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 20 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications