Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூச்சுவிட முடியலை.. சூறைக்காற்று + கனமழையால் பெங்களூரில் தவித்த மக்கள்! உதவாத போலீஸ் + ஆம்புலன்ஸ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் இன்று மாலையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையில் சிக்கியவர்கள் மூச்சுவிட முடியாமல் தவித்தனர். அவர்கள் உதவி கோரியும் போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் உதவிகள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இருப்பினும் கடைசியாக லாரி டிரைவர் அவர்களை காப்பாற்றி பத்திரமாக மீட்டார்.

பெங்களூரில் வழக்கத்தை விட இந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் அதிகரித்தது. பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்ட நிலையில் மே மாதம் முதல் வாரத்தில் பெங்களூரில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தது.

Bangalore summanahalli some people not able to breathe due to winds and rains

ஆனால் கடந்த சில நாட்களாக பெங்களூரில் கனமழை பெய்யவில்லை. நகரில் ஆங்காங்கே சில இடங்களில் மட்டுமே மழை என்பது பெய்து வந்தது. இந்நிலையில் தான் இன்று திடீரென்று பெங்களூரின் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

பெங்களூர் சிவாஜி நகர், ஓகலிபுரம், கேஆர்புரம், ராஜாஜி நகர், மல்லேஸ்வரம், மெஜஸ்டிக், உள்பட நகரின் பல்வேறு முக்கிய இடங்களில் மாலையில் இருந்தே கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் ராஜராஜேஸ்வரி நகர், மாருதி மந்தீர் வார்டு, வித்யாவிடா, புலிகேசி நகர், உத்தரஹள்ளி, கெங்கேரி, சம்பங்கி ராம் நகர், கொட்டிகேபாளையம், அஞ்சனபுரா, குஷால் நகர், பானசாவாவடி, ஒய்சாலா நகர் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது.

இதுதவிர ஹெப்பால், நாகவரா, ஆர்டி நகர், பாகலூர், எலகங்கா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. உல்லால் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. மேலும் சிக்கஜாலா பகுதியில் கனமழை பெய்தது. பெங்களூர் புறநகர் பகுதியான நெலமங்களாவிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. மாலை நேரம் என்பதால் கனமழையால் பலரும் அலுவலகம் முடிந்து வீடு திரும்ப முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில் தான் பெங்களூர் அவுட்டர் ரிங்க் ரோடு சும்மனஹள்ளியில் சிலர் கனமழையில் சிக்கி கொண்டனர். அவர்கள் சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனத்தின் தார்பாயின் கீழ் தஞ்சம் அடைந்தனர். நேரம் ஆக ஆக கனமழை மற்றும் சூறைக்காற்று ஆகியவற்றின் தாக்கம் என்பது அதிகரித்தது. இதனால் மழைத்துளியின் வேகம் அதிகரித்தது. இதனால் அங்கிருந்தவர்கள் மூச்சுவிட முடியாமல் தவித்தனர்.

இதுதொடர்பாக கர்நாடகா வெதர் எனும் எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் பெங்களூர் மாநகர போலீசாரிடம் உதவி கோரப்பட்டது. அதற்கு பெங்களூர் மாநகர போலீசாரின் எக்ஸ் பக்கத்தில் இருந்து உடனடியாக ரிப்ளை செய்தனர். அதில், ‛‛நாங்கள் நோட் செய்து விட்டோம். காமாட்சிபாளைய போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கிறோம். உடனடியாக 112க்கு போன் செய்யுங்கள் அவர்கள் உதவி செய்வார்கள்'' என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் உடனடியாக அங்கு சிக்கியவர்களுக்கு போலீசாரின் உதவி என்பது கிடைக்கவில்லை.

இதையடுத்து மீண்டும் அந்த எக்ஸ் பக்கத்தில், பெங்களூர் மாநகர போலீசார் மற்றும் பெங்களூர் டிராபிக் போலீசார் ஆகியோரின் எக்ஸ் பக்கத்தை டேக் செய்தது. ‛‛சூறைக்காற்று மற்றும் கனமழையால் உடல் முழுவதும் நனைந்து விட்டது. மூச்சுவிடுவதில் பிரச்சனை உள்ளது. ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தும் ரெஸ்பான்ஸ் இல்லை. சாலையில் ஒரு லாரியின் தார்பயாின் அடியில் நாங்கள் உள்ளோம். உங்கள் உதவியை தவிர எங்களிடம் வேறு எந்த நம்பிக்கையும் இல்லை. தயவு செய்து உதவுங்கள்'' என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் உதவி கிடைக்கவில்லை.

இதற்கிடையே தான் அங்கு பைக்கில் சென்றவர் உதவி செய்து அவர்களை மீட்டார். இதுதொடர்பாக அந்த பக்கத்தில், ‛‛இறுதியாக எங்களுக்கு உதவி கிடைத்துவிட்டது. கடவுள் அனுப்பிய லாரி டிரைவரால் 30 பைக் பயணிகளுக்கு அவுட்டர் ரிங்க் ரோட்டில் உதவி கிடைத்து விட்டது. தற்போது நாங்கள் பாதுகாப்பான இடத்துக்கு வந்துவிட்டோம். போன் சரியாக வேலை செய்யவில்லை. இன்னொரு செல்போன் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. லேப்டாப் தண்ணீரில் நனைந்ததால் வேலை செய்யவில்லை. '' என தெரிவிக்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+