Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கக் கடலில் இன்று புயல் உருவாகிறது.. வேகமெடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. 4 நாளைக்கு பலத்த மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவாகிறது... தெற்கு வங்கக்கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தமிழகத்தை நோக்கி நகர்வதால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில், 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யலாம் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

சமீப நாட்களாகவே, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. இதையடுத்து, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

bay of bengal weather report rain

புதுச்சேரி: நேற்றைய தினம், அது நாகப்பட்டினத்துக்கு தெற்கு-தென் கிழக்கே 540 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கே-தென் கிழக்கே 650 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கே-தென் கிழக்கே 650 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 740 கி.மீ. தொலைவிலும் நிலைக்கொண்டிருந்தது.

இன்று அதிகாலை 1 மணி நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் அதிகரித்துள்ளது. அதன்படி, 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், தற்போது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று புயலாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை: இன்று புயலாக மாறியபின் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து 670 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 580 கி.மீ தொலைவிலும், நாகையில் இருந்து 470 கி.மீ தொலைவிலும், திரிகோணமலையில் இருந்து 190 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பபு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களில் அதிகனமழைக்கான "ரெட் அலர்ட்" எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை,. கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது நேற்றைய நிலவரப்படி, நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு, தென்கிழக்கில், 590 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து, 710 கி.மீ., தொலைவிலும், சென்னையில் இருந்து, 800 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டு இருந்தது.

புயலாக மாறும்: இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு, வடமேற்கில் மணிக்கு, 12 கி.மீ., வேகத்தில் நகர்ந்த நிலையில், இன்று புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலாக மாறிய பின், தமிழக கரையை ஒட்டி நிலைகொள்ளலாம்.

புயல் காரணமாக, தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும். தமிழகத்தில் அநேக இடங்கள், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலுார், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்காலில் ஒரு சில இடங்களில், இன்று, 20 செ.மீ.,க்கு மேல் அதிகனமழை பெய்வதற்கான, ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

திருவாரூர்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலுார், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சா வூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று, 12 முதல், 20 செ.மீ., வரை மிக கனமழை பெய்யலாம். இதற்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று, 11 செமீ வரை கனமழை பெய்யலாம்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' அறிவிக்கப்பட்டுள்ளது ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில், நாளை மறுதினம் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்கள்: தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசும் என்பதால், 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடலுக்கு சென்றவர்கள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் 25 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+