சூடாகும் பெங்களூர்.. டெல்லியை விட இங்குதான் வெயில் அதிகமாம்! வானிலை மையம் வார்னிங்
பெங்களூர்: இதமான வானிலைக்கு பெயர் பெற்ற பெங்களூரில் தற்போது வெயில் அதிகரித்துள்ளது. இனி வரும் நாட்களில் வெயில் மேலும் அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
வழக்கமாக கோடைக்காலங்களில் டெல்லிதான் சூடாக இருக்கும். இந்த முறையை டெல்லியை விட பெங்களூர் அதிக சூடாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இன்றைய வானிலை நிலவரப்படி டெல்லியில் 27 டிகிரி செல்சியஸ் (81 டிகிரி ஃபாரன்ஹீட்) வெயில் பதிவாகியிருக்கிறது. ஆனால் பெங்களூரில் 35.9 டிகிரி செல்சியஸ் (97 டிகிரி ஃபாரன்ஹீட்) பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கோடைக்காலத்தில் வெயிலுக்கு பெயர் பெற்றது டெல்லிதான். ஆனால், டெல்லியில் பெங்களூரை விட 2.7 டிகிரி செல்ஸியல் வெப்பம் குறைவாக இருக்கிறது.
வழக்கமாக பெங்களூரில் மார்ச் முதல் வாரத்தில்தான் வெயில் காலம் தொடங்கும். இப்போது அடிக்கும் வெயிலை வைத்து பார்க்கும்போது, பிப்ரவரி பாதியில் கோடைக்காலம் தொடங்க வாய்ப்பு இருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடக்கிலிருந்து வீசும் காற்றுதான் பெங்களூருக்கு குளிரை கொண்டு வரும். ஆனால் இந்த முறை இக்காற்று எதிர்பார்த்த அளவுக்கு வீசவில்லை. எனவேதான் வெயில் அதிகரித்துள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மட்டுமல்லாது 'லா நினா'(La Niña) நிகழ்வும் பெங்களூரில் வெயில் அதிகரிப்பதற்கான காரணம் என்று கூறியுள்ளனர். அதாவது பூமத்திய ரேகைதான் உலகை இரண்டாக பிரிக்கும் ஒரு கற்பனை கோடு. இந்த கோட்டுக்கு மேலே உள்ள பகுதியில்தான் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா கனடா உள்ளிட்டவை இருக்கின்றன. அதேபோல கீழே உள்ள பகுதியில் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள் இருக்கின்றன.
மேலே உள்ள நாடுகளை குளிர்விக்க வழக்கமாக காற்று வீசும். இந்த நிகழ்வுக்கு பெயர்தான் லா நினா. ஆனால் இந்த முறை ல நினா கொஞ்சம் வீக்காக இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவேதான் இந்தியாவுக்கு தேவையான குளிர் காற்றின் அளவு குறைந்திருக்கிறது. குறிப்பாக பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகா, கேரளாவுக்கு தேவையான குளிர்காற்று குறைந்திருக்கிறது. இதுவே பெங்களூரில் வெப்பம் அதிகரிக்க காரணமாக சொல்லப்படுகிறது.
பகலில் அதிக வெப்பமும், இரவில் அதிக குளிரும் இருப்பதால் பெங்களூர் மக்கள் வித்தியாசமான காலநிலையை எதிர்கொண்டிருக்கின்றனர். மாறிவரும் காலநிலை மாற்றம் எப்போதும் வளர்ந்து வரும் நாடுகளைதான் குறி வைக்கிறது. அதுபோல இந்த முறை இந்தியா காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications