அமீர் கானா இது.. சென்னை புயல் வெள்ளத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சிக்கியது எப்படி? படகில் மீட்பு
சென்னை: புயல் வெள்ளத்தில் சிக்கிய பாலிவுட் நடிகர் அமீர் கானை தீயணைப்பு படையினர் பைபர் படகில் பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றார்கள்.
சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் கடந்த 2 நாட்களாக மிக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. ஏராளமான வீடுகள், கட்டிடங்களின் தரை தளங்களில் தண்ணீர் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலையில் மக்கள் தவித்து வருகிறார்கள். தீயணைப்பு படையினர், போலீசார், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் களத்தில் இறங்கி மக்களை மீட்டு வருகிறார்கள். இவர்களும் தன்னார்வலர்களும் இணைந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை காரப்பாக்கம் பகுதியிலும் மழை காரணமாக வெள்ளம் கடுமையாக சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்த நடிகர் விஷ்ணு விஷாலும் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டு இருந்தார். அதில், "என் வீட்டிலும் தண்ணீர் புகுந்துவிட்டது. காரப்பாக்கத்தில் தண்ணீர் மட்டம் மிக மோசமாக அதிகரித்து வருகிறது. உதவிக்கு அழைத்து இருக்கிறேன். மின்சாரம் கிடையாது. வைஃபை இணைப்பும் இல்லை. செல்போன் சிக்னலும் இல்லை. இங்கு எதுவுமே இல்லை.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொட்டை மாடியில் மட்டுமே எனக்கு செல்போன் சிக்னல் கிடைக்கிறது. எனக்கும் இங்கு உள்ள பலருக்கும் ஏதாவது உதவி கிடைக்கும் என்று நம்புகிறோம். சென்னை மக்களின் நிலையை என்னால் உணர முடிகிறது." என்றார். அவரின் இந்த பதிவு அதிகளவில் பகிரப்பட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. இதனை அடுத்து நடிகர் விஷ்ணு விஷாலை மீட்புப் படையினர் அவரது வீட்டுக்கு சென்று பைபர் மீட்டு வந்தனர். இதனை அடுத்து எக்ஸ் தளத்தில் மீட்புப் படையினருடன் தான் எடுத்துக்கொண்ட படத்தை பதிவிட்டு விஷ்ணு விஷால் நன்றி தெரிவித்து உள்ளார்.
அதில், "என்னை போன்ற மக்களுக்கு உதவி செய்த தீயணைப்பு படையினருக்கு நன்றி. காரப்பாக்கத்தில் மீட்புப் பணிகள் தொடங்கிவிட்டன. 3 படகுகள் இயக்கப்படுகின்றன. இத்தகைய கடினமான காலங்களில் தமிழ்நாடு அரசு செய்வது சிறப்பான பணி. ஓய்வின்றி உழைக்கும் அனைத்தும் அதிகாரிகளுக்கும் நன்றி." என்று குறிப்பிட்டு இருந்தார். அவர் வெளியிட்ட புகைப்படங்களில் ஆச்சரியமளிக்கும் வகையில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானும் உள்ளார். இது அமீர் கான் தானா அல்லது அவரது சாயலில் உள்ளவரா என்று விசாரித்தபோது அவர் அமீர் கான் என்பது உறுதியானது.
தன்னுடைய தாயார் ஜீனத் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் கடந்த மாதம் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிப்பதற்காக இங்கு குடிபெயர்ந்து உள்ளார். தனியார் ஹோட்டலில் தங்கியபடி தாயை பராரிமரித்து வரும் அவர், நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் வெள்ளத்தில் சிக்கிய அவரை மீட்புப் படை வீரர்கள் மீட்டு இருக்கிறார்கள்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications