குழப்பி எடுக்கும் மிக்ஜாம் புயல். சட்டென.. லேசாக ரூட்டை மாற்றி.. என்ன நடக்குது? இதுதான் ஆபத்தே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக்ஜாங் புயல் தொடக்கத்தில் இருந்தே கணிக்க முடியாமல் உள்ளது. தற்போது அந்த புயல் லேசாக ரூட்டை மாற்றி உள்ளது.

மிக்ஜாங் புயல் வங்கக்கடலில் உருவானதால் இருந்தே அதன் பாதை குழப்பத்தை ஏற்படுத்தியது. முதலில் அந்த மிக்ஜாங் புயல் மேற்கு வங்கம் நோக்கி செல்லும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் சென்னை நோக்கி வரும். வட தமிழ்நாட்டை தாக்கும் என்று கணிக்கப்பட்டது.

அதன்பின் லேசாக மேலே நகர்ந்து தெற்கு ஆந்திர பிரதேசம் வரை புயல் செல்லும் என்று கணிப்புகள் கூறின. இதோடு நிற்காமல் தெற்கு ஆந்திர பிரதேசத்தில் புயல் எங்கே கடக்கும் என்பதிலும் குழப்பம் இருந்தது.

By changing the route, How cyclone Michaung is confusing the people and weather researchers

புயல் கடைப்பதில் குழப்பம்: சென்னையை மிக்ஜாம்ம் புயல் அடித்து துவம்சம் செய்து இருக்கிறது. இரவு முழுக்க பெய்த கனமழை, தீவிர காற்று காரணமாக சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்ட மிக்ஜாம், புயல் நாளை கரையை கடக்கிறது. இன்று சென்னைக்கு அருகே கரையை நெருங்கும் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய இடைவிடாமல் பெய்த மழை பெய்தது.

நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5ல் கரையை கடப்பதாக வானிலை மையம், தகவல் வெளியிட்டு உள்ளது. ஆனாலும் இங்கேதான் கடக்கும் என்பதில் உறுதி அளிக்கப்படவில்லை. இந்த இடத்தில்தான் புயல் கரையை கடக்க போகிறது என்பது உறுதியாக இன்னும் சொல்லப்படவில்லை.

( மிக்ஜாம் புயல் நகர நகர.. அடடா தமிழ்நாடு வெதர்மேன் இப்படியொரு வார்னிங் கொடுக்குறாரே! ரொம்ப கவனம்! )

கணிக்க முடியவில்லை: மிக்ஜாங் புயல் தொடக்கத்தில் இருந்தே கணிக்க முடியாமல் உள்ளது. தற்போது அந்த புயல் லேசாக ரூட்டை மாற்றி உள்ளது. வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் 'மிக்ஜாம்' புயல் நேற்று 2330 மணி அளவில் அதே பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இதனால் சென்னைக்கு நீடிக்கும்.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12- 2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

By changing the route, How cyclone Michaung is confusing the people and weather researchers

குழப்பிய புயல்; அதிகாலை நிலவரப்படி சென்னைக்கு அருகே 50 கிமீ தூரம் வரை புயல் வந்துள்ளது. மிக்ஜாங் புயல் தற்போது சென்னைக்கு மிக அருகே உள்ளது. நேற்று இரவு அந்த புயல் வட வடமேற்கு திசையில் சென்றது. அதாவது தொடக்கத்தில் சரியாக கணிக்கப்பட்ட பாதையில் சென்றது. நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே செல்லும் வகையில் நகர்ந்தது.

ஆனால் இப்போது வடமேற்கு திசையில் செல்ல தொடங்கி உள்ளது. அதாவது கொஞ்சம் சென்னைக்கு அருகே நகர தொடங்கி உள்ளது. அதாவது புயல் லேசாக ரூட்டை மாற்றி உள்ளது. இதுதான் வானிலை ஆய்வாளர்களை குழப்பி உள்ளது. அதனால்தான் சென்னையில் எதிர்பார்க்காத மாபெரும் மழை பெய்து வருகிறது. புயல் இன்னும் எவ்வளவு நேரத்திற்கு சென்னைக்கு மழையை கொடுக்கும்.. எவ்வளவு நேரம் சென்னையின் முக்கிய பகுதிகள் மழையில் பாதிக்கும் என்பது நேரம் செல்ல செல்லவே தெரிய வரும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+