மிக்ஜாம் புயல் நகர நகர.. அடடா தமிழ்நாடு வெதர்மேன் இப்படியொரு வார்னிங் கொடுக்குறாரே! ரொம்ப கவனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை; மிக்ஜாம் புயல் வங்கக்கடலில் நகர நகர சென்னையிலும் மழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த புயல் தொடர்பாக சென்னையில் மிக மழை பெய்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

நேற்று இரவு 10 மணிக்கு சென்னையில் தொடங்கிய மழை மற்றும் புயல் காற்று இன்னும் நிற்கவில்லை. மழையோடு சேர்த்து 50- 80 கிமீ வேகம் வரை காற்று வீசி வருவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

புயலுக்கு முன் ஒரு கட்டமாக தீவிர மழை மேகங்கள் சென்னைக்கு வந்தன. அதன்பின் புயல் சென்னைக்கு அருகே வந்த போது இரண்டாம் கட்டமாக இன்னும் தீவிர மழை மேகங்கள் சென்னைக்கு அருகே வந்தன. மூன்றாம் கட்டமாக புயல் நகர நகர கூடுதல் மழை மேகங்கள் சென்னைக்கு அருகே வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன.

Very Major warning from Tamil Nadu Weatherman on Chennai Raisn and cyclone Michaung

தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை; இந்த புயல் தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் முக்கியமான எச்சரிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில், மிக்ஜாம் புயல் பற்றிய சுருக்கமான அறிவிப்பு - மழை இப்போதைக்கு நிற்கப் போவதில்லை, மாலை வரை நீடிக்கும்.
-------------
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது, கடந்த 12 மணிநேரமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மீது இந்த புயலின் வலிமையான மேற்கு பகுதி விழுகின்றன. இதனால் மழை பெய்கிறது.

( அந்த 8 மணி நேரம்.. சென்னையே விக்கித்து போனது.. மிக்ஜாம் புயல் நெருங்கி வந்த அந்த நொடி! என்ன நடந்தது? )

இதில் மேலும் மிகவும் கவலையளிக்கும் பகுதி என்னவென்றால், இந்த புயலின் மெதுவான நகர்வு காரணமாக, மாலை வரை மழை தொடரக்கூடும். எனவே, தீவிர எச்சரிக்கை தேவை. எந்த நேரத்திலும் மீண்டும் மின்சாரம் வரும என்பது தெரியவில்லை. வெளியில் பயணம் செய்வதை தவிர்க்கவும். பத்திரமாக இருக்கவும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

மிரட்டும் மழை அளவு: மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக சென்னையில் விடிய விடிய விடாமல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையில் பல்வேறு சாலையில் ஆறுபோல் காட்சியளிக்கும் மழை நீர் காரணமாக மக்கள் முடங்கி உள்ளனர். பல இடங்களில் சென்னை மழை இரட்டை சதம் அடித்து உள்ளது. எதிர்பார்த்ததை விட அதிகமாக மழை பெய்துள்ளது என்பதால் சென்னையில் பல பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

Very Major warning from Tamil Nadu Weatherman on Chennai Raisn and cyclone Michaung

எங்கே இருக்கிறது?: வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் 'மிக்ஜாம்' புயல் நேற்று 2330 மணி அளவில் அதே பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இதனால் சென்னைக்கு நீடிக்கும்.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12- 2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+