அந்த 8 மணி நேரம்.. சென்னையே விக்கித்து போனது.. மிக்ஜாம் புயல் நெருங்கி வந்த அந்த நொடி! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நேற்று இரவு 11 மணியில் இருந்து இன்று காலை 7 மணி வரை சுமார் 8 மணி நேரங்கள் விடாமல் மழையும், காற்றும் அடித்து உள்ளது.

வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் 'மிக்ஜாம்' புயல் நேற்று 2330 மணி அளவில் அதே பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

What did cyclone Michaung do to Chennai and other parts of Tamil Nadu in just 8 hours?

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12- 2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆட்டிப்படைத்த புயல்: சென்னையில் நேற்று இரவு 11 மணியில் இருந்து இன்று காலை 7 மணி வரை சுமார் 8 மணி நேரங்கள் விடாமல் மழையும், காற்றும் அடித்து உள்ளது. இந்த 8 மணி நேரத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1. சென்னையில் இரவு 11 மணிக்கு மழை தொடங்கியது. அதற்கு முன்பே மாலையில் இருந்து பெய்தாலும். மிக கனமழை தொடங்கியது என்னவோ 11 மணிக்குத்தான்.

2. மழையோடு சேர்த்து 50- 80 கிமீ வேகம் வரை காற்று வீசியது. முக்கியமாக அதிகாலை 3-4 மணி அளவில் காற்றின் வேகம் உச்சத்தை தொட்டது.

3. காற்று, மழைக்கு இடையே.. சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மழை காரணமாக.. மரங்கள் விழுந்துள்ளன. சாலைகள் முடங்கி உள்ளன.

4. புயல் ஒரு கட்டத்தில் 50 கிமீ தூரம் வரை கூட சென்னையில் இருந்து இருந்தது. அதாவது புயலின் ஒரு பகுதி.. சென்னைக்கு மிக அருகே 50 கிமீ தூரம் வரை கூட இவர்ந்து. இந்த நேரத்தில்தான் சென்னையில் மிக கனமழை பெய்தது.

5. புயலுக்கு முன் ஒரு கட்டமாக தீவிர மழை மேகங்கள் சென்னைக்கு வந்தன. அதன்பின் புயல் சென்னைக்கு அருகே வந்த போது இரண்டாம் கட்டமாக இன்னும் தீவிர மழை மேகங்கள் சென்னைக்கு அருகே வந்தன. மூன்றாம் கட்டமாக புயல் நகர நகர கூடுதல் மழை மேகங்கள் சென்னைக்கு அருகே வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன.

6. மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக சென்னையில் விடிய விடிய விடாமல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. சென்னையில் பல்வேறு சாலையில் ஆறுபோல் காட்சியளிக்கும் மழை நீர் காரணமாக மக்கள் முடங்கி உள்ளனர். பல இடங்களில் சென்னை மழை இரட்டை சதம் அடித்து உள்ளது. எதிர்பார்த்ததை விட அதிகமாக மழை பெய்துள்ளது என்பதால் சென்னையில் பல பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

7.வளசரவாக்கம் 203.1, மலர் காலனி 194.7, பெருங்குடி 189.3, கோடம்பாக்கம் 179.4, சோழிங்கநல்லூர் 177.3, அடையார் 166.5, புழல் 165, பெருங்குடி 160.2, கொளத்தூர் 157.2, அம்பத்தூர் 152.4, தேனாம்பேட்டை 145.5, திரு.வி.கே நகர் 143.1, முகலிவாக்கம் 142.2, ஐஸ் ஹவுஸ் 141.6, அண்ணாநகர் 140.4 செமீ மழை ஆகிய பகுதிகளில் பெய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+