அமெரிக்க பாணியில்.. வருகிறது அப்ரூவல் ரேட்டிங் சிஸ்டம்.. அமைச்சர்களை ரேட்டிங் செய்யும் விஜய்?
சென்னை: தமிழகத்தில் புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் பல்வேறு சீர்திருத்தங்களையும் மக்கள் நலத்திட்டங்களையும் அறிவித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தற்போது இரண்டு மிக முக்கிய நகர்வுகளை அரசு எடுத்துள்ளது.
அமெரிக்காவில் அதிபரின் செயல்பாடுகளை மக்கள் எப்படி 'அப்ரூவல் ரேட்டிங்' (Approval Rating) மூலம் மதிப்பிடுகிறார்களோ, அதேபோல தமிழகத்தில் உள்ள அமைச்சர்களின் செயல்பாடுகளையும் மதிப்பிட்டு மார்க் போடும் புதிய முறையை முதல்வர் விஜய் கொண்டு வர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இங்கே மக்கள் மதிப்பிடாமல் அமைச்சர்களின் செயல்களை முதல்வர் மதிப்பிடுவார். மற்றொருபுறம், பெண்களுக்கான அனைத்து அரசுப் பேருந்துகளிலும் இலவச பயணத் திட்டத்தை (வெற்றி பயணம் திட்டம்) செயல்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன.
அமைச்சர்களுக்கு 'மார்க்' போடும் புதிய சிஸ்டம்!
அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளில் மக்கள் மத்தியில் அரசுக்கும், அமைச்சர்களுக்கும் இருக்கும் செல்வாக்கை அறிய 'அப்ரூவல் ரேட்டிங்' கணக்கெடுப்பு நடத்தப்படும். இதே பாணியில், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அமைச்சரின் துறை சார்ந்த செயல்பாடுகள், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வேகம், மற்றும் ஊழலற்ற நிர்வாகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு பிரத்யேக மார்க்கிங் மற்றும் ரேட்டிங் சிஸ்டத்தை (Review and Marking System) முதல்வர் விஜய் அறிமுகப்படுத்த இருக்கிறாராம்.

இதன் மூலம் அமைச்சர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மக்கள் பணியில் சுணக்கம் காட்டினால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இந்த மதிப்பீட்டு முறை உதவும் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 21ஆம் நூற்றாண்டின் அதிநவீன நல்ஆளுமைக்கு (Good Governance) இது ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்: பணிகள் துவக்கம்!
இன்னொரு பக்கம் விஜய் நடத்திய ஆலோசனையில் தவெக கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, தமிழ்நாடு போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் 8 அரசு போக்குவரத்து கழகங்களின் மூலமாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் நிதித் தேவை குறித்த விரிவான அறிக்கையைத் தயாரிக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ளன.
தற்போது தமிழக போக்குவரத்துத் துறையின் கீழ் மொத்தம் 21,527 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜூன் 16ஆம் தேதி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, ஒவ்வொரு போக்குவரத்து கழகமும் தங்களுக்குத் தேவையான கூடுதல் நிதி மற்றும் மாற்று வருவாய் ஆதாரங்கள் குறித்த அறிக்கையைத் தயாரித்து வருகின்றன.
போக்குவரத்து கழக அதிகாரிகள் விளக்கம்
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"தற்போது இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளில் 62 முதல் 64 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். தற்போது நடைமுறையில் உள்ள சாதாரண நகரப் பேருந்துகளுக்கான இலவச பயணத் திட்டத்திற்காக போக்குவரத்து கழகங்களுக்கு மாதந்தோறும் ₹16 கோடி அரசு நிதியுதவியாக வழங்கப்பட்டு வருகிறது.
இப்போது இந்த திட்டத்தை எக்ஸ்பிரஸ் (Express) மற்றும் அனைத்து விரைவுப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தும்போது, அரசுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமை எவ்வளவு? அதை ஈடுகட்ட மாற்று வழிகளில் வருவாயைப் பெருக்குவது எப்படி? என்பது குறித்து விரிவான அறிக்கையைத் தயாரித்து வருகிறோம். இந்த அறிக்கைகள் விரைவில் தமிழக அரசிடமும், போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனிடமும் சமர்ப்பிக்கப்படும்."
இந்த முழுமையான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், வரவிருக்கும் மாநில பட்ஜெட்டில் பெண்களுக்கான 'அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணம்' குறித்த அதிகாரப்பூர்வ மற்றும் விரிவான அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தூய்மையான நிர்வாகம் மற்றும் பெண்களுக்கான சமூகப் பாதுகாப்பு என இரண்டையும் இலக்காகக் கொண்டு TVK அரசு நகர்வது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications