அடுத்த 1 மணி நேரம்.. சென்னை உள்பட 29 மாவட்டங்களுக்கு "ஆரஞ்ச் அலர்ட்".. வெளுக்க போகுது கனமழை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் 37 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 29 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்தது. சாத்தியார் பகுதியில் 11 செமீ மழை பெய்தது. இதேபோல் ஆண்டிப்பட்டியில் 8 செமீ அளவுக்கு நல்ல மழை பெய்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் நேற்று நல்ல மழை பெய்தது. கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 10 செமீ மழை பதிவானது.

tamil nadu rain rain chennai

வடதமிழக கடலோர பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தான் தமிழகத்தில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் மொத்தம் 37 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் 29 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்டும், 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, நாகை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, குமரி ஆகிய 29 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று இன்று இரவு 7 மணி வரை கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் மற்றும் புதுவை, காரைக்காலில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு (மஞ்சள் நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது) உள்ளது. என்று வானிலை மையம் கூறியுள்ளது.

முன்னதாக இன்று மதியம் வெளியான வானிலை அறிவிப்பில், "வடதமிழக கடலோர பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளையும் தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் அக். 22ம் தேதி தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+