மிக கனமழை + நிலச்சரிவுக்கு வாய்ப்பு.. இன்று முதல் 3 நாள் நீலகிரி போறீங்களா? கலெக்டர் மேஜர் அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் மாவட்டத்தில் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பருவமழை வெளுத்த வாங்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு பற்றி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain weather nilgiris

அதன்படி இன்று மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அநேக இடங்களிலும், இதர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சூறைக்காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தான் மிக கனமழையின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். மேலும் நீலகிரி மாவட்ட மக்கள் மற்றும் அங்கு சுற்றுலா செல்லும் மக்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய சூழலில் தான் நீலகிரி மாவட்ட கலகெ்டர் லட்சுமி பவ்யா முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளார். அதன்படி இன்று முதல் 3 நாட்கள் நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வர வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் லட்சுமி பவ்யா தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+