கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. கொளுத்தும் வெயிலுக்கு இடையே 'குட் நியூஸ்' சொன்ன வானிலை மையம்
சென்னை: தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவிட்துள்ளது.
தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால், கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். குறிப்பாக தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் நேற்று மழை பெய்தது.

இதனால் தென் மாவட்டங்கள் கொஞ்சம் குளிந்து காணப்பட்டது. எனினும் மற்ற பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவிட்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது:-
மழைக்கு வாய்ப்பு:
* தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
* 05.04.2024 மற்றும் 06.04.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
* 07.04.2024: கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
* 08.04.2024: மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
* 09.04.2024: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
* 10.04.2024 மற்றும் 11.04.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
* 5.04.2024 முதல் 08.04.2024 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த நான்கு தினங்களில் 2° 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
* அடுத்த நான்கு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 39° 41° செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37° 39° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34° 37° செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஈரப்பதம்:
* அடுத்த நான்கு தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும்.
* அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஒரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் எப்படி?:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
05.04.2024: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:
தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
மழை அளவு:
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): சிற்றாறு-I (கன்னியாகுமரி) 4, சிவலோகம் (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி தலா 3, சுருளக்கோடு (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 2, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), சோலையார் (கோயம்புத்தூர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி) தலா 1.
அதிகபட்ச வெப்பநிலை:
* தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° -3° செல்சியஸ் அதிகமாக இருந்தது. புதுவையில் இயல்பை விட சற்று அதிகமாகவும், காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும் இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 3° -3.5° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருந்தது.
* உள் மாவட்ட சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39° - 41° செல்சியஸ், கடலோரப் பகுதிகளில் 33° - 37° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 23° - 29° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
* ஈரோட்டில் அதிகபட்ச வெப்பம் 41.4° செல்சியஸ், சேலத்தியில் 40.6° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 40.5° செல்சியஸ், திருப்பத்தூரில் 40.2° செல்சியஸ் மற்றும் தருமபுரியில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
* மதுரை நகரம், திருச்சி, நாமக்கல், வேலூர் மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39° செல்சியஸ் முதல் 40° செல்சியஸ் வரை பதிவாகி யுள்ளது.
* கோயம்புத்தூர், மதுரை விமான நிலையம், பாளையம்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சென்னை மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் 38° செல்சியஸ் முதல் 39° செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications