அடுத்த 3 மணி நேரம்.. சென்னை, திருவள்ளூர், நெல்லை, குமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. நேற்று குமரியில் கனமழை பெய்தது. நேற்று ஒரே நாளில் குமரியில் 13 செ.மீ மழை பெய்துள்ளது. இன்றும் குமரி, நெல்லையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வானிலை அறிவிப்பில், "தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 05.11.2024 முதல் 07.11.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 08.11.2024 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்க வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications