அடுத்த 2 மணி நேரம்.. 13 மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது.. குளு குளு அப்டேட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, தென்காசி, திண்டுக்கல், தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. இன்று பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் மழை பெய்யும் என வானிலை குளு குளு அப்டேட் கொடுத்துள்ளது.
தமிழகத்தின் கோடைக்காலத்தில் கூட அவ்வப்போது இந்த ஆண்டு மழை பெய்தது. பெரிய அளவில் வெயில் தெரியாத அளவுக்கு தமிழகத்தின் சென்னை முதல் குமரி வரை பல்வேறு மாவட்டங்களிலும் மழை கொட்டியது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிக கனமழை பெய்தது. நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்தது.

அடுத்த 2 மணி நேரத்தில்..
ஆனால் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. மாறாக வெப்பத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே சென்றது. நேற்று மட்டும் தமிழகத்தில் 13 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக மதுரையில் 106 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவானது. இன்றும் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்தது.
இந்த நிலையில் தான் சென்னை வானிலை ஆய்வு மையம் குளு குளு அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அடுத்த 2 மணி நேரத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
13 மாவட்டங்கள் என்னென்ன?
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
அடுத்த ஒரு வார அப்டேட்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிகு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை.11 முதல் 15 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் மழை பெய்யுமா?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (09-07-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (10-07-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும்,குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும். இருக்கக்கூடும்.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications