சென்னை முதல் நெல்லை வரை கொட்டப்போகும் மழை.. அடுத்த 3 மணி நேரம் அலர்ட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, திருவள்ளூர், தூத்துக்குடி, மதுரை, தேனி, சேலம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்தது. தற்போதும் பெரம்பலூர், ஆத்தூர், திருவண்ணாமலை, ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, திருவள்ளூர், தூத்துக்குடி, மதுரை, தேனி, சேலம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இரவு 10 மணி வரை நீலகிரி, கோவை, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ண்கிரி, வேலூர், திருச்சி, பெரம்பலூர் மற்றும் திருநெல்வேலியில் அடுத்த 3 மணி நேரத்தில் இரவு 10 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
5ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
6ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 7 மற்றும் 8ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை பொறுத்த அளவில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் (1-3 செல்சியஸ்) குறைந்து, இயல்பை ஒட்டியும்/இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும்" என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications