அலர்ட் மக்களே.. 3 மணி நேரத்திற்கு.. சென்னை, திருவள்ளூர் உள்பட 27 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்தது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், கடலூர், திருச்சி உள்பட 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி, சென்னையில் பல இடங்களில் மழை கொட்டியது. வானிலை ஆய்வு மையம் கணித்தது போலவே சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை கொட்டியது. குறிப்பாக சென்னை தாம்பரம், பெருங்களத்தூர், மாங்காடு மற்றும் தெற்கு புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதே போல நகரின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
கிண்டி, ஆலந்தூர், முகப்பேர், கோயம்பேடு, அண்ணாநகர், அரும்பாக்கம், அமைந்தகரை பகுதிகளிலும் கன மழை பெய்தது. திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால் சாலையின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரம் போல வெயில் சுட்டெரித்த நிலையில் சட்டென்று கொட்டித்தீர்த்த கனமழையால் வானிலை ஜில்லென்று மாறி குளிர் காற்று வீசியது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்பட 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தின் 27 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், கரூர், மதுரை, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications