அடுத்த 3 மணி நேரத்தில் பிச்சிக்கிட்டு வருது மழை.. இந்த 4 மாவட்டமும் குடையை எடுங்க! துள்ளுது தென்காசி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களுக்கு பலத்த மழை பெய்ய போவதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த வருடம் பருவமழை ஓரளவு கைகொடுத்தாலும், இந்த முறை கொளுத்திய வெயிலானது, வறட்சியை அதிகப்படுத்திவிட்டது.. எனினும், தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

rain Tamil Nadu Weather News weather report Tenkasi Virudhunagar

கனமழை: 2 நாட்களுக்கு முன்புகூட, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை நிலவரம் குறித்து மஞ்சள் அலர்ட் தரப்பட்டிருந்தது.. வட தமிழகத்திலும் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், இன்று அதாவது, 12ம் தேதி ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தென்காசி: நீலகிரி, கோயம்புத்தூர்,தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

அதேபோல, நாளை 13ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

15ம் தேதி வரை: 14ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

15 மற்றும் 16ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றும் மழை: அந்தவகையில் இன்றைய தினம் நீலகிரி, கோயம்புத்தூர்,தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

மகிழ்ச்சி: அதன்படி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வெப்பம் நீங்கி, மேலும் குளிர்ச்சி பெறும் என்பதால் மேற்கண்ட மாவட்ட மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

மீனவர்கள்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 11-ந் தேதி சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று கூறியிருந்தது.

மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மேற்கூறிய தினங்களில் மேற்கண்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+