சென்னை மக்களே! குடையை ரெடியா வச்சுக்கோங்க.. அடுத்த 3 மணி நேரம் கொட்டப்போகும் மழை.. வானிலை மையம்
சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதேபோல் ராணிப்பேட்டை, தென்காசி, குமரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு ஒரு வாரத்திற்கும் மேலாக தென்காசி, குமரி, கேரள மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் மழை பெய்து வருகிறது. இன்றும் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இரவு 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ராணிப்பேட்டை, குமரி, தென்காசி, திருநெல்வேலியில் இன்று இரவு 10 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மஞ்சள் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் மழை பெய்யும் நேரங்களில் தாழ்வான பகுதிகளில் சில இடங்களில் மழை நீர் தேங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications