மழை வருது.. உடனே இதை பண்ணுங்க! அதிகாலையில் சென்னை மக்களுக்கு மாநகராட்சி சொன்ன முக்கிய அறிவுரை
சென்னை: சென்னையில் வசிக்கும் மாநகராட்சி மக்களுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வழங்கி உள்ளது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்க சென்னைக்கு 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இவர்கள் சென்னையில் நடைபெறும் பணிகளை கண்காணிப்பார்கள். சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே துணை ஆணையர்களாக பணியாற்றிய சமீரன், குமாரவேல்பாண்டியன், மேக்நாத்ரெட்டி, உள்ளிட்டோர் நியமனம். பணிகளை மண்டல வாரியாக ஒருங்கிணைத்து துரிதப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இப்படிப்பட்ட நிலையில் சென்னையில் வசிக்கும் மாநகராட்சி மக்களுக்கு முக்கியமான அறிவுரை ஒன்றை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வழங்கி உள்ளது. அதன்படி உங்கள் கைப்பேசி மற்றும் கணினி போன்ற முக்கியமான எலக்ட்ரானிக் பொருட்களை சார்ஜ் செய்து கொள்ளவும்.
ரெடியாகும் சென்னை: சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சென்னை ரிப்பன் மாளிகையில் வார் ரூம் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 83 கழிவுநீர் உறிஞ்சும் லாரிகள் உள்ளன. பணிகளை மேற்பார்வையிட பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதோடு TamilNadu Alert என்ற செயலி மூலம் முன்னெச்சரிக்கைகளை உடனுக்குடன் பொதுமக்கள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் 150 பேர் கொண்ட குழு, 4 ஷிப்ட்களாக செயல்படுகிறது. பொதுமக்களின் உயிரும், உடமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முதன்மை நோக்கம் என்பதால் இந்த பணிகள் தீவிரமாக நடத்தப்படுவதாக அமைச்சர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்காக 13,000 தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மழை பாதிப்பு குறித்து 1913 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 113 மோட்டார் பம்புகள் தாழ்வான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் நேற்று இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை கிண்டி, ஆலந்தூர், வடபழனியில், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை; பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட புறநகரிலும் கனமழை பெய்தது.
கனமழை: தமிழ்நாட்டில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகபட்டினம் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications