Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளத்தில் சிக்கிய கார்களுக்கு இன்சூரன்ஸ் உண்டா? இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: புயல் மழை காரணமாக சென்னை முழுவதும் வெள்ளம் சூழந்த நிலையில், தற்போது பல இடங்களில் மழைநீர் வடிந்திருக்கிறது. இருப்பினும் புறநகர் பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியவில்லை. இந்நிலையில், மழைநீரால் பாதிக்கப்பட்ட கார்களுக்கு இன்சூரன்ஸ் எப்படி கவர் செய்வது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்னர் சைக்கிள் வாங்குவதே பெரிய விஷயமாக இருந்தது. அப்போதெல்லாம் சைக்கிள் வைத்திருப்பவர்களிடம் அதை கேட்டால் அவ்வளவு எனில் கடனாக கொடுக்க மாட்டார்கள். அதன் பின்னர் காலம் வேகமாக சுழன்றுவிட்டது. அநேகமாக ஒரு 15 வருடங்களுக்கு முன்னர் பைக் வாங்குவது கனவாகவே பல இளைஞர்களுக்கு இருந்தது. சைக்கிள் வைத்திருப்பவர்களிடம் கூட அதை கேட்டு வாங்கிவிடலாம் ஆனால்.. பைக் வைத்திருப்பவர்களிடம் அப்படி வாங்கிவிடவே முடியாது.

Chennai Flood: Find out if your insurance will cover flooded cars

ஆனால் இப்போது கார் வைத்திருப்பது மிகவும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. எனவே நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பலரும் இஎம்ஐ மூலமாக கார் வாங்கி வைத்திருக்கின்றனர். ஆனால் மிக்ஜாம் புயலில் கார், பைக் எல்லாம் தடம் தெரியாமல் அடித்து செல்லப்பட்டுவிட்டது. சில மணி நேரத்திற்கு பின்னர்தான் தங்களது வாகனங்களை அடையாளம் காண முடிந்ததாக மக்கள் புலம்புகின்றனர்.

இப்படி இருக்கையில் வாகனம் வாங்கும் போது எடுக்கப்பட்ட இன்சூரன்ஸை வைத்து தற்போது வாகனங்களை எப்படியாவது சரி செய்துவிட முடியுமா? என்று கேள்வியெழுப்பியுள்ளனர். இதற்கு நெட்டிசன்கள் சோஷியல் மீடியாக்களில் பதிலளித்துள்ளனர். ராஜேஷ் எனும் நபர் இது குறித்து விரிவாக பதிவிட்டுள்ளார். அதாவது,

"வாகன காப்பீடு எடுக்கையில், RTI - Return to Invoice இந்த பேரிடர் காலத்தில் பலனை கொடுக்கும். Comprehensive Coverage வாங்கியிருந்தால் ரிப்பேர் செய்வதற்கு பயன்படும். கார் மொத்தமாக சேதமாயிருந்தால், காரிள் IDV (Insurers Declared Value) மட்டும்தான் கிடைக்கும். நிறைய பேர், இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையை குறைக்க, காரின் value-வை குறைத்து போடுவார்கள். அப்படி குறைத்து/அதிகரித்து போடுவது, இந்த மாதிரி சமயங்களில் பயனளிக்காது.

ஆனால் RTI-யுடன் நீங்கள் வாகன இன்சூரன்ஸ் எடுத்திருந்தால், உங்கள் வாகனம் மொத்தமாக (ரிப்பேர் செய்ய முடியாத அளவிற்கு) சேதமாகியிருந்தாலும், நீங்கள் கார் வாங்கும்போது pay பண்ணின வண்டியின் invoice மதிப்பு உங்களுக்கு கிளைம் ஆக வழங்கப்படும். அதாவது, வாகனத்தின் IDV எவ்வளவாக இருந்தாலும், உங்கள் வாகனத்தின் முழு மதிப்பு உங்களுக்கு வழங்கப்படும், depreciation இல்லாமல்.

ஆனால், இந்த RTI, நீங்கள் புதிய வாகனம் வாங்கும்போதிலிருந்தே எடுத்திருக்க வேண்டும். வாகனம் வாங்கி, முதல் ஐந்து வருடங்களுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும் (அனைத்து வருடங்களும் நீங்கள் RTI எடுத்து இருக்க வேண்டும். ஒரு வருடம் தவறினால் கூட அதற்கு அடுத்த வருடம் பாலிசி renew செய்கையில் இது கிடைக்காது).

ஐந்து வருடம் முடிந்தவுடன், ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே RTI வசதியை மேலும் இரண்டு வருடங்களுக்கு வழங்குகிறது. இதை படித்த பின்பு, உங்கள் பழைய வாகனத்திற்கு இதை எடுக்க நினைத்தால் அது முடியாது. ஏனெனில், புதிய வாகனம் வாங்கும்போதிலிருந்தே RTI எடுத்திருக்க வேண்டும் என்று ஏற்னெவே கூறிவிட்டேனே! ஆகையால், அடுத்த முறை, புதிய வாகனம் வாங்குகையில், இந்த RTI'யும் சேர்த்தே எடுக்க முயலுங்கள்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+