வெள்ளம் வடிந்தும் வடியாத சோகம்.. அமுதம் கடைகளில் காய்கறிகள் விற்பனை.. பெட்ரோல், டீசல் விநியோகம்
சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பொது விநியோகத்திட்ட அங்காடிகளில் இன்றியமையாப் பொருள்கள் விநியோகம் மற்றும் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட உள்ளது. தொடர்மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காய்கறிகளை அமுதம் பல்பொருள் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் அதி கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில பெட்ரோல் பங்க்கள் வெள்ளத்தால் சூழப்பட்டன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து, அங்கு பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்பட்டு, பங்க் மூடப்பட்டது.

சில பெட்ரோல் பங்க்குகள் திறந்திருந்த போதிலும், பெட்ரோல், டீசல் போதிய அளவு இருப்பு வைக்காததால், தட்டுப்பாடு ஏற்பட்டது. சில பங்க்-களில் மட்டும் பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்பட்டது. அவற்றை நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.
இந்த நிலையில் சென்னையிலுள்ள குரோம்பேட்டை, நாகல்கேனி, பல்லாவரம் ஆகிய பகுதிகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பி.பி.சி.எல். சில்லறை விற்பனை நிலையங்களில் பெட்ரோல்-டீசல் அளவின் இருப்பை அமைச்சர் சக்கரபாணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சக்கரபாணி, வெள்ள பாதிப்பிற்குள்ளான இடங்களில் 39 பெட்ரோல் பங்க்குகள் மட்டுமே இயங்கவில்லை. மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள வீடுகளுக்கே சென்று சிலிண்டர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் தட்டுப்பாடின்றி வழங்க ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். புயல், மழையால் பாதித்த 4 மாவட்டங்களிலும் தேவைப்படுவோருக்கு வீடு, வீடாக பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யப்படுகிறது. 6,000 கொள்ளளவு கொண்ட 25 மினி டேங்கர்களில் வீடு, வீடாக பெட்ரோல், டீசல் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதனைத் தொடர்ந்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பொது விநியோகத்திட்ட அங்காடிகளில் இன்றியமையாப் பொருள்கள் விநியோகம் மற்றும் பெட்ரோல், டீசல் விநியோகம் குறித்து உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், கடைகளுக்குள் நீர் புகுந்ததால் வீணான பொருள்களை உடனடியாக அப்புறப்படுத்தவும் அதற்கு பதிலாகப் புதிய பொருள்களை வழங்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மேலும் அனைத்துக் நியாயவிலைக் கடைகளிலும் அத்தியாவசியப் பொருள்களைத் தடையின்றி தரமாக வழங்குதலை உறுதிப்படுத்தடவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. தொடர்மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காய்கறிகளை அமுதம் பல்பொருள் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யவும் உத்தரவிடப்பட்டது.
சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அமுதம் பல்பொருள் அங்காடிகளில் காய்கறிகள் விற்பனை தொடர்ந்து நடைபெறும். அனைத்து நியாயவிலை கடைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கவும் அரசு உத்தரவிட்டு உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் பழுதான வாகனங்களுக்கான சிறப்பு முகாம் அமைக்கப்படும். வாகன விற்பனையாளர் சங்க கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று மழையால் சேதம் அடைந்த வாகனங்களின் பழுதை நீக்க தற்காலிகமாக இடம் வழங்கப்படும் பழுதான வாகனங்களை பழுது நீக்கும் இடத்திற்கு இழுத்து செல்வதற்காக வாகன வசதி ஏற்பாடு செய்வது குறித்து ஆராயப்படும். இழுவை வாகனங்களை பிற மாவட்டங்களில் இருந்து கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications