மிக்ஜாம் புயல் மீட்பு பணி: இந்த மாவட்டங்களுக்கு எல்லாம் இன்று பள்ளி , கல்லூரி விடுமுறை! நோட் பண்ணுங்க
சென்னை: மிக்ஜாம் புயல் மீட்பு பணிகள் காரணமாக இன்று சில மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு விடப்பட்டு உள்ளது.
மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (07-12-23) விடுமுறை விடப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், விடுமுறை விடப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வெள்ளம் மிக்ஜாம் புயலை தொடர்ந்து சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு.. தற்போது பெரும்பாலான இடங்களில் தற்போது வெள்ளம் வடிந்துள்ளது. முக்கியமாக நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளது. அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை வெள்ளம் இன்றி காணப்படுகிறது. அதேபோல் சாலையின் உட்பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது.
ஆனால் ஒரு சில ஏரியாக்கள் இன்னும் வெள்ளத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவில்லை. மடிப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், ஐடி ஏரியா பகுதிகள் மொத்தமாக இன்னும் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. இந்த பகுதிகள் இன்னும் வெள்ளத்தில் இருந்து தப்பிக்கவில்லை. இப்போதும் சென்னையில் பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கே வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது. மக்கள் உள்ளேயே சிக்கி இருக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் 40 மணி நேரமாக மின்சாரம் இல்லை. குடிநீர் இல்லை. மக்கள் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வெள்ளம் வடியாத பகுதிகள்: கடலில் புயல் நின்றதால் காற்று காரணமாக அலைகள் அதிகம் இருந்தன. இதனால் ஆற்று நீர் கடலில் சேர முடியவில்லை. ஆறு நிரம்பியதால்.. கால்வாய் நீர் எங்கும் கடலில் கலக்க முடியவில்லை. இதனால் சென்னை வெள்ள நீர் கால்வாய்கள் அமைப்புகள் எல்லாம் அப்படியே முடங்கி போனது. இதுவே தண்ணீர் நீண்ட நேரம் தேங்கி இருக்க முக்கிய காரணம் ஆகும்.
மீளும் சென்னை: மேலும் இது 2015ஐ விட மோசமான வெள்ளம். 2015ஐ விட மோசமான மழை. ஆனாலும் சென்னை மறுநாளே வேகமாக மீண்டு வந்தது. பல ஏரியாக்கள் மிக வேகமாக மழை வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்தது. சென்னை இப்படி சட்டென எழுந்து நிற்க ஒரே காரணம்.. இந்த வடிகால் அமைப்புகள்தான்.
இந்த வடிகால் அமைப்புகள் மட்டும் இல்லை என்றால் சென்னை மிக கடுமையான சூழ்நிலையில் சிக்கி தவித்து இருக்கும். இப்போதும் கூட வடிகால்கள் இல்லாத இடங்களில்தான் மக்கள் கடுமையாக சிக்கி தவித்து வருகின்றனர்.
ஸ்டாலின் உத்தரவு: சென்னையை உலுக்கி உள்ள புயலில் பலர் மீட்பு பணிகளை செய்து வருகின்றன. மொத்த அரசு நிர்வாகமும் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு பக்கம் அரசின் மீட்பு பணிகள் நடக்க இன்னொரு பக்கம் தன்னார்வலர்களும் மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மொத்தமாக பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக அறிக்கை அளிக்கவும் அதிகாரிகள், அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications