நாங்க இருக்கோம் சென்னை மக்களே.. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க! காவல்துறை உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை: மிக்ஜாம் புயல் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள பொதுமக்களுக்கு நிவாரணம் மட்டும் மீட்புப் பணி உதவிகளை மேற்கொள்ள சென்னை காவல்துறை உதவி எண்களை அறிவித்து உள்ளது.
மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை பாதிப்பு இன்னும் தீராமல் உள்ளது. பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்தாலும், சில இடங்களில் நிலைமை இன்னும் மோசமாகவே காணப்படுகிறது. போலீசார், தீயணைப்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், கமாண்டோ படையினர் என அனைத்து தரப்பினரும் இணைந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களும் பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்களும் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை காவல்துறை தற்போது எக்ஸ் தளத்தில் புயல் தொடர்பா சென்னை பெருநகர காவல்துறை, பொதுமக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு பின்வரும் சென்னை பெருநகர காவல் உதவி மைய எண்களை அறிவித்துள்ளது.
23452359, 23452360, 23452361, 23452377 மற்றும் GCP வெள்ளக் கட்டுப்பாட்டறை எண்: 23452437" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
முன்னதாக காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சாலைகளின் தற்போதைய போக்குவரத்து நிலை: விமான நிலையத்திலிருந்து அண்ணா சாலை வரையும், கிழக்கு கடற்கரைச் சாலையும் தடையற்ற போக்குவரத்து சாலைகளாக (Green Corridor) பராமரிக்கப்படுகிறது. மற்ற இடங்களில் 1 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அவசர தேவைக்காக அண்ணா சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைகளைப் பயன்படுத்த பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முக்கிய போக்குவரத்து மாற்றங்கள்: புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதால், மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. பெருநகர சென்னை மாநகராட்சி & நெடுஞ்சாலைத் துறையின் ஒருங்கிணைப்புடன் நீர்தேங்கியுள்ள முக்கியப் பகுதிகளில் நீரகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அனைத்து பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலும் DDRT குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து செயல்படுகின்றன." என்று குறிப்பிட்டு உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications