“பூதம்”.. மீனவர்களே ரொம்ப கவனம்! இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையத்தின் சூறாவளி அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்றும் வறண்ட வானிலையே தொடரும் எனவும் தெரிவித்து இருந்த சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என்றும் எச்சரித்து இருக்கிறது. ஏன் என்று விரிவாக பார்ப்போம்.
இது குறித்து வெளியான அறிவிப்பில், "பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். அதிகபட்ச வெப்ப நிலை: பிப்ரவரி 29 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 32 - 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 24 - 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 33 - 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 24 - 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகளில் பிப்ரவரி 29 ஆம் தேதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications