தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு.. வெப்ப அலைக்கு நடுவில் வந்த நல்ல செய்தி
சென்னை: தமிழகத்தில் வருகிற 29-ந்தேதி வரை வெப்ப நிலை 104 முதல் 107 டிகிரி வரை பதிவாகும் என்றும், கன்னியாகுமரி, நெல்லை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 28ம்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக உள்ளது. வழக்கத்தைவிட வெப்பக்காற்று அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் மக்கள் வெளியில் சென்றால், சுருண்டு விழும் அளவிற்கு பல இடங்களில் வெயிலின் தாக்கம் இருக்கிறது. இரவில் புழுக்கம் காரணமாக அவதிப்படுகிறார்கள். வெப்ப அலையால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை எங்கும் இல்லாத அளவாக ஈரோட்டில் 108 டிகிரி வெப்பமும், வேலூர், திருப்பத்தூரில் தலா 106 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது.

இன்றும் நாளையும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய 24 மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
அதேநேரம் வெயிலின் தாக்கத்திற்கு நடுவே கன்னியாகுமரி மாவட்டம திற்பரப்பில் 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வெயில் மற்றும் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, "தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 29-ந்தேதி வரை (அடுத்த 3 நாட்கள்), அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும். அதாவது 104 முதல் 107 டிகிரி வரை அதிகரிக்கும். அதேபோல், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் 100 டிகிரி முதல் 105 டிகிரி வரை வெப்பம் வாட்டி வதைக்கும்.
அதேநேரம், தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன்காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 28-ந்தேதி வரை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்ற தமிழக பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். 29-ந்தேதி முதல் மே 1-ந்தேதி வரையிலும், தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்" இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை












Click it and Unblock the Notifications