வங்கக் கடலில் காற்றழுத்தம்! சென்னையில் அதிகாலை முதலே மழை! 23 ல் தீவிர மழை பெய்யும்!
சென்னை: சென்னையில் அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் மார்கழி மாத குளிரும் வாட்டி எடுக்கிறது. தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி முதல் மீண்டும் கனமழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த சீசனில் பெஞ்சல் புயல் உருவானது. ஓரிரு காற்றழுத்தங்களும் உருவாகி தமிழகத்தில் பரவலாக மழையை கொடுத்தன.

அதாவது வரும் கோடையில் தண்ணீர் பஞ்சம் ஏற்படாதவாறு மழைபெய்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காலம் முடிய இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் மார்கழி மாத குளிர் வாட்டி எடுக்கிறது. பல்வேறு இடங்களில் அதிகாலையில் பனிமூட்டமாக இருப்பதால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று மழையில்லாமல் இருந்த நிலையில் இன்று அதிகாலை முதலே லேசான மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, வள்ளுவர் கோட்டம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று மழையில்லாமல் இருந்த நிலையில் ன்று அதிகாலை முதலே லேசான மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, வள்ளுவர் கோட்டம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
குளிர் காற்றும் வீசி வருவதால், காலையில் பள்ளிக்கும், அலுவலகத்திற்கும், அத்தியாவசிய பணிகளுக்கும் செல்வோர் குளிரில் நடுங்கியபடியே வாகனங்களை இயக்கி வருகிறார்கள். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் , தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 7 மணி முதல் மிதமான மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று வடமேற்கு திசையில் வடதமிழக- தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும். தொடர்ந்து வரும் 22ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. வருகிற 23-ந்தேதியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மழை பெய்யத் தொடங்கும்.
அதனைத்தொடர்ந்து டெல்டா மாவட்டங்கள் தொடங்கி தமிழ்நாட்டில் பரவலாக மழையை கொடுத்து சென்ற அரபிக்கடல் பகுதியில் இந்த தாழ்வுப் பகுதி வலு இழக்க இருக்கிறது.
20-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
21-12-2024 முதல் 25-12-2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் வேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
20-12-2024: வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேசுத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
20-12-2024: ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
21-12-2024: வடக்கு கடலோரப்பகுதிகள், அதனை ஓட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு ஓரிசா கடலோரப்பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
22-12-2024; வடக்கு ஆந்திர தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
23-12-2024: மத்திய மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 இலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
-
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications