இரவு முழுக்க டமால் டுமீல்.. கனமழையால் சென்னைவாசிகள் குஷி.. 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை
சென்னை: இடி மின்னலுடன் சென்னையிலும் புறநகரிலும் விடிய விடிய கனமழை பெய்தது. இரவு முழுவமும் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலையின் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. பல பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் குறுகிய சாலைகளில் வாகனங்கள் மெதுவாகவே ஊர்ந்து சென்றன.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை மெல்ல விடைபெற உள்ளது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செப்டம்பர் 30 வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இரவு முதல் பரவலாக கனமழை பெய்தது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.
சென்னையில் நகர் பகுதிகளில் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. கோயம்பேடு, ராமாபுரம், மதுரவாயல், வளசரவாக்கம், வானகரம், ஆலப்பாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி,மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.
திருவான்மியூர், நீலாங்கரை, அண்ணா நகர், திருமங்கலம், தி.நகர் ஓ.எம்.ஆர் மற்றும் ஈ.சி.ஆர் பகுதிகளிலும் கனமழை கொட்டியது. முக்கிய சாலைகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி, வெள்ளக்காடாக காட்சியளித்தது. ஞாயிறு இரவு மழையோடு முடிந்தது. திடீர் மழையால் வெளியூர் சென்று திரும்பிய வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை உட்பட 12 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications