தீபாவளிக்கு ஊருக்கு படையெடுக்கும் சென்னை மக்கள்.. மழை இருக்குமா என்ன! வெதர்மேன் மிக முக்கிய தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே வரும் நாட்களில் கிளைமேட் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வெதர்மேன் பகிர்ந்துள்ளார். மேலும், சென்னை மக்கள் தீபாவளிக்கு ஊருக்கு செல்ல தயாராகும் நிலையில், அப்போது மழை இருக்குமா என்பது குறித்த தகவல்களையும் வெதர்மேன் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்த பருவமழை சீசன் தொடங்கியது முதலே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது.

இது மட்டுமின்றி மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழையே பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தீபாவளி நெருங்குதே: இது ஒரு பக்கம் இருக்க மக்கள் இப்போது தீபாவளி கொண்டாடத் தயாராகி வருகிறார்கள். வரும் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், இதற்கு நாளை முதலே பொதுமக்கள் ஊருக்குச் செல்ல தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் சென்னை மற்றும் புறநகரில் மழை இருக்குமா என்பது குறித்த தகவல்களை வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார்.
இதற்கிடையே இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை தொடரும் என்று குறிப்பிட்ட வெதர்மேன், சென்னையில் அடுத்து எப்போது மழை இருக்கிறது என்பது குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
வெதர்மேன்: இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைக்குச் சாதகமான சூழலே நிலவுகிறது. தென் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்யும்.
அதேநேரம் கேடிசிசி (சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்) உட்பட வட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள் வறண்டதாக இருக்கும். கேடிசிசி பகுதியில் அடுத்த மழை நவம்பர் 4 அல்லது 5ம் தேதி தான் தொடங்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், கன்னியாகுமரியில் பல பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டிய கனமழை குறித்த தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
மழை இருக்காது: அதாவது சென்னை மற்றும் புறநகரில் நவ. 4, 5ம் தேதிகளிலேயே மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் நாளை முதலே வெளியூர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அப்போது மழை இருக்காது என்பது போலவே வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "வரும் அக். 30ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அக். 31 மற்றும் நவ. 1ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications